ஒவ்வொரு ஆண், பெண்ணும் உணர வேண்டிய விடயம்

இன்றைய கால பெண்கள் திறுமணம் முடித்த பின்னும் தனது கணவரை மதிக்காமலும், தனது கணவர் அல்லாது வேறு ஆண்களுடன் Facebook, WhatsApp போன்றதில் தொடர்புகளை வைத்திருப்பதை நாம் அறிந்த விடயமே. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் கணவர்மார்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன .

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே! தனது கரம் பிடித்தவரே உனக்கான படைப்பாக அல்லாஹ் படைத்தான் அதை ஏற்றுக்கொண்டு தனது கணவனின் கரத்தை மாத்திரம் தனது சொந்தமாக நினைப்பாயாக.

ஒவ்வொரு ஆணும் தனது தொழி நிமிர்த்தம் வெளியே செல்கையில் நிறுவனங்களில், பல்கலைக்கழகங்களில், பாதைகளில் பல அன்னிய பெண்களை பார்க்கும் வாய்ப்பு அதிகம், அதேபோல் மனமும் தடுமாறும். இந்த நொடியில் எனக்கான துனையிருக்க நான் ஏன் மற்றபெண்களை பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று எண்ணம் யாருக்கு வருகிறதோ அவரின் மனைவி பெறும் பாக்கியசாலி.

அன்பான சகோதரர்களே! உன்னை நம்பி வந்திருக்கிறாள், உனக்காகவே பெறும் கஷ்டத்தையை சுமக்கிறாள் இவ்வாறு இருக்கையில் நீ ஏன் மற்ற பெண்களை பார்க்கிறாய் இந்த நொடியிலிருந்து முடிவெடு சகோதரா! உன் பார்வை உன் மனைவிக்கு மாத்திரமே  அதே போல் மற்ற பெண்களையும் உன் சகோதரி போன்று மதிப்பாயாக!!!

FASLAN HASHIM south eastern university of srilanka Islahiyya arabic college வெளியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்