விழி இரண்டும் குளமாகி அழுது தவித்து ஓடிவந்தேன் அங்கே என் குழந்தை கருகி இறக்கத் துடிக்கிறது கயவன் விதைத்த தீ எம் கனவை பொசுக்கி எரிக்கிறது
காதல் மனைவி தீயில் விழ கைக் குழந்தை தாய்மடி இணைய பாய்ந்து சென்று கைகொடுக்க கை வழுக்க உடல் சிலிர்க்க நான் தவிக்க கண்ணீர் மட்டுமே எனக்காய் இருந்தது
ஒற்றை நாளில் உடைந்த வாழ்க்கை நேற்று என்னில் எதிர் மையாய் இருந்தது
ஆற்று ஓரத்தில் அழகாய் ஒரு வீடு மெல்லிசை பாடிய குருவிகள் ஒழிந்து கொண்டே ஒளியை விதைத்த மின்மினிகள் தென்றல் தந்த மரங்கள் காதில் தேனை விதைத்த சலசலப்பு பஞ்சாய் விரிந்த சருகுகள் அதில் ஊர்ந்து திரிந்த சாரைகள் வான் முழுதும் தாரைகை நிறைய வழி நெடுக ஒழி கொடுக்க நிலா
இன்று தீயின் காயம் உடலை வருத்த பிரிவின் சோகம் உளத்தை நொறுக்க உன் கால்களில் தஞ்சம் கோருகிறேன் அமேசோனின் ஓர் அனாதையாய்
கருத்துகள்
கருத்துரையிடுக