இறந்து போன வார்த்தைகளாய் என் கடந்து போன காலங்கள் எழுத நினைத்தாலும் எழுத்துக்குள் அடங்காத என்னவனின் நினைவுகள் நினைத்துப் பார்த்து கண்ணீர் சிந்த மட்டுமே துணை நிற்கின்றன
பல்கலைக்கழக வாசலிலே விமானப் படை வீரனாக எதிர்பாராத அவன் சந்திப்பு காலவோட்டத்தில் நட்பாகிட
அவனது ஆறடி உயரம் அன்பான குணம் கவர்ந்திழுத்திட காதல் என்னும் போதையில் அந்நாட்கள்
காதல் வானில் அன்பிலே கைகோர்த்து கதை பேசிய நிமிடங்கள் இன்னும் நீங்காத வடுக்களாய்
போராட்டங்களுக்கு மத்தியில் திருமண நாள் நிச்சயித்து உன்னவள் என்ற பெருமைக்குரியவளாகி ஓர் வாரம்
உரிமையுடன் உன் தோள் தொட்டு பைக்கில் பயணித்த அந்த நிமிடங்கள் நம் வாழ்வின் இறுதி மணித்துளிகள் என்று உணர்ந்திருக்கவில்லை
அந்த ஒரு நொடி மெல்லக் கண் விழித்துப் பார்க்கின்றேன் கண்ணீரோடு உறவுகள் சூழ.. காயக்கட்டுகளோடு வைத்தியசாலை கட்டிலில் நான்...
என் விழிகள் என்னவனையே தேட என் செவிப்பரையில் விழுந்த அந்த வார்த்தைகள் ஓர் பேரிடியாக என் உயிரின் பாதி இவ்வுலகை விட்டுப் பிரிந்திட
கத்தினேன் கதறினேன் பைத்தியம் ஆனேன்
என் கை தொட்ட காதல் கணவன் மறு உலகில் எனக்கு கிடைக்க வேண்டுமென்ற பேராசையோடு
காயங்கள் வலிகள் கட்டுக்கதைகள் அவ்வப்போது அவதூருகள் சில சந்தேகங்கள் இத்தனையும் தாங்கி
வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன் என்னவனை மனதில் சுமந்து விதவை என்ற பட்டத்தோடு
கருத்துகள்
கருத்துரையிடுக