தன் பிடியை விட்டு ஜெனி விலகியதும் மறுபடியும் அவளை இழுத்து கொண்டான் கில்கமேஷ்...
"ஷ்... ஐயோ என்ன பண்ற கே கே... எல்லாரும் ஆடுவதை நிறுத்திட்டாங்க பாரு.. லூதர் அங்கிள் ஏதோ சொல்லபோராரு.." என்று அவனை செல்லமாக தள்ளிவிட்டு விலக நினைத்தபோது அவன் சட்டை பட்டனில் இழுபட்டு அவள் ஆடையில் முன் பகுதியில் ஒரு துண்டு கிழிபட்டு சத்தம் கேட்டதும் உடனே அதை உணர்ந்த ஜெனி அவனையே கட்டி பிடித்து கொண்டாள்...
"இப்போ என்னாச்சு... போகணும் என்றாயே!"
"அது.. அது...." என்று சொல்ல வெட்கத்தில் தயங்கி தயங்கி நிற்க மறுபக்கம் லூதர்,
"நான் சொன்ன முக்கியமான நபர்.... வேற யாருமில்லை என்னோட பொண்ணு டிடானியா தான்...."
"டிடானியாவா????"
"என்னோட ஒரே மகள்... இப்போ காலேஜ் போய்க்கிட்டு இருக்கா.. இந்த கம்பெனியோட அடுத்த ஸீ ஈ ஓ வா நான் அவளை உங்க எல்லோருக்கும் அறிமுகப்படுத்த விரும்புறேன்..."என்றதும் எல்லோரும் கைதட்டினர்...
"வாவ்.. டிடானியா நெக்ஸ்ட் ஸீ ஈ ஓவாம் ...சூப்பர்... இல்லே.."என்று ஆர்தரும் சொல்ல..
"ஆமா... ஆனா அவ இந்நேரம் ஸ்டேஜில் அவ அப்பாகூட நிற்கணுமே.. ஆளையே காணும்.." என்று தேடிக்கொண்டு போகும் போது ஜெனியும் கில்கமேஷும் ஒட்டிக்கொண்டு நின்றதை கண்டு
"ஓஹ் .ஜெனி லவ்வ சொல்லிட்டா போல் இருக்கே.."என்றெண்ணி கொண்டு சென்றாள்.
ஒன்றுக்கு இருமுறை டிடானியா என்று அவர் அழைத்தும் அவள் வரவே இல்லை. அவருக்கும் தர்ம சங்கடமாகி விட்டது. ஏதோ சொல்லி சமாளித்து கொண்டார். அவர் தள்ளி நின்று அவளுக்கு போன் செய்ததையும் அவள் ஆன்ஸ்வர் பண்ணவில்லை என்பதையும் அவரின் முகத்தை வைத்து ஜெனி அறிந்து கொண்டாள்.
"என்ன பொண்ணு இவ... அப்பாவை இப்படி தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிட்டு அப்படி என்னை முக்கியமான வேலை..?" என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.
"ஹெலோ...... என்ன யோசனை... இது என்ன புது டான்ஸ் மூமெண்டா.... பிடி தளரவில்லை.." என்றான் கில்கமேஷ்.. அப்படியே மெல்ல அவள் காதில்..
"இப்படியே பிடிச்சுக்கிட்டு இருந்தா... என்னை அப்பறம் கண்ட்ரோல் பண்ண என்னாலேயே முடியாது.. ஜாக்கிரதை..." என்று சீண்டினான்.
அவளால் சட்டென விலகவும் முடியவில்லை...அவன் சொன்னதை கேட்டு பயந்து விட்டாள்.
"அது வந்து.... என்னோட ட்ரெஸ் முன்னாடி கொஞ்சம் கிழிஞ்சிடுச்சு.." என்று அவள் மெதுவாக சொல்ல....
"என்னது ட்ரெஸ்.. கிழி...." என அவன் சத்தமாக கேட்கவர சட்டென அவள் பதற்றத்தில் அவன் வாயை பொத்தி விட்டாள்.
"மானத்தை வாங்கிடுவே போல இருக்கே... கொஞ்சம் என்னோட வா.. " என்று அதே தோரணையில் அவனை வாஷ் ரூம் பக்கமாக இழுத்து சென்றாள் ஜெனி.
"கண்ணை மூடு..."
"ஏன்..."
"கண்ணை மூடு என்று சொல்றேன் இல்லே..."என்று அதட்ட அவன் கண்களை மூடிக்கொண்டதும் மெல்ல அவனை விட்டு விலகி மறுபக்கம் திரும்பி கொண்டாள்.
*********************
"இந்த ராத்திரியில் யாரு இந்த பொண்ணு.... அதுவும் பார்ட்டி நடக்குற ஏரியால இருந்து வர்றா ...?"என்று சந்தேகத்துடன் பார்த்தால் அது வேறு யாருமில்லை... டிடானியாவே தான்...
"இவ என்ன இந்த நேரத்தில்..." என்று யோசித்து கொண்டே... அவளை நெருங்க அருகில் வந்ததும் தான் அவளுக்கும் ராபர்ட் என்று புரிந்தது..
"ஹாய்.... டிடானியா... நீ என்ன இந்த பக்கம்... பார்ட்டிக்கு போகலியா?"
"அ... ஆஹ்.. அதுவந்து.. நான்... நான் அங்கே இருந்து தான் வர்றேன்... கொஞ்சம் தலைவலி மாதிரி.. அதான் அங்கிருந்து புறப்பட்டேன்..." என்றாள்.
"ஒஹ்ஹ்... உனக்கு உடம்பு சரி இல்லையா... சரி வா ஹாஸ்பிடல் போகலாம்.." என்று ராபர்ட் அழைத்தான்.
"இல்லே வேணாம்... வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாயிடும்..." என்று சொல்ல அவனும்
"சரி நாம ரெண்டுபேருமே வீட்டுக்கு போகலாம்..." என்று சொல்லி ராபர்ட் அவளை அழைத்தான். அவர்கள் வேறு வழி இல்லாமல் அவளும் அதற்கு சரி என்று சொல்லி அவனோடவே சென்றாள்.
"ஆமா நீங்க எங்க இன்னிக்கி முழுக்க ஆளையே காணும்.. எங்க போய் இருந்தீங்க.." என்று டிடானியா கேட்டாள்.
"அது வந்து எங்க ப்ரொபெசரை பார்க்க.. ப்ரொஜெக்ட் விஷயமா தான்..." என்று அவனும் சமாளித்தான். கொஞ்ச நேரத்தில் வீடு வந்துவிட்டது.
"சரி... ரொம்ப தேங்க்ஸ்... நீங்க அப்படியே பார்ட்டிக்கு போங்க... எப்படியும் பினிஸ் ஆக 12.00 மணி கூட ஆகலாம். உங்க நண்பர்களோடு சந்தோசமா இருங்க.." என்று அவனை பார்த்து சொல்லிவிட்டு மாடிக்கு செல்ல.
"எனக்கு ரொம்ப டயர்ட் ஆக இருக்கு.. சோ நானும் போகல.. என்றவன் தாவிக்குதித்து உள்ளே சென்றான்.
இதையெல்லாம் சரியாக காதில் போட்டு கொள்ளாமல் அவள் மாடிக்கு சென்றாள். அவனும் குளித்து தயாராகினான். பின்னர் இரவு உணவை உண்டான். நேரம்11.25 இருக்கும். தூங்குவதற்கு அவன் அறைக்கு சென்றான் ராபர்ட் அப்போது தான் அவன் ரெகார்ட் பண்ணியது நியாபகத்திற்கு வரவே உடனே போனை கையில் எடுத்து கொண்டான்.
ஆனால் திடு திப்பென்று ஊரில் எல்லா இடத்திலும் கரண்ட் கட் ஆனது. எல்லாம் இருள் மயமாக இருந்தது. அங்கே ஜெனி பயத்தில் வாஷ் ரூமில் வைத்தே கில்கமேஷை மறுபடியும் அணைத்து கொண்டாள்..
கருத்துகள்
கருத்துரையிடுக