"இப்போ என்ன?" என்று அவன் கேட்டதும்....
"மன்னிச்சிடுங்க... பவர் வரும் வரைக்கும் இப்படியே நின்னுகிறேன்.. இருட்டுல என்னால எப்படி தனியா இருக்க முடியும் சொல்லுங்க..." என்று மெதுவாக சொன்னாள்.
"அப்படின்னா எப்போதும் இப்படியே இருட்டா இருந்தா நல்லா இருக்கும்... இல்லியா?" என்று கேட்டான் அவனும் மெதுவாக...
"ஆஹ் சரி... நல்லா தான் இருக்கும்.... அப்படியே வெளில போய்டுவோம்...." என்று ஜெனி அவனை அழைத்து கொண்டு கதவை திறந்து வெளியே சென்றபோது அதிர்ச்சி காத்துக்கொண்டிருத்தது. வெளியே கொள்ளைக்காரர்கள் சிலர் ஹாலுக்குள் நுழைந்து ஆளுக்கொரு ஆளாக பிடித்து கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொண்டிருந்தனர். அவர்கள் இங்கு இதனை செய்வதற்காகவே அந்த ஏரியா முழுக்க பவர்கட் பண்ணி இருந்தார்கள்.
"ஒஹ்ஹ் காட்...."
அங்கு அடுக்கடுக்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த அலங்கார மெழுகுவர்த்திகளின் ஒளியில் ஜெனிக்கு நிலைமை புரிந்து விட்டது..
"இவங்கெல்லாம் யாரு...?" என்று கில்கமேஷ் கேட்டான்..
"ஷ்..." என்று அவனை கொஞ்சம் உள்ளார இழுத்து கொண்டவள்..
"இவங்க இங்க கொள்ளை அடிக்க வந்திருப்பாங்க போல இருக்கு... ஐயோ இப்போ என்ன பண்ணறது... உள்ளே மீரா ஆர்தர் அதோட எல்லோரும் மாடிக்கிட்டு இருக்காங்களே!" என்று சொன்னதில் இருந்து நிலைமை எந்த அளவு மோசமானது என்பதை கில்கமேஷ் புரிந்து கொண்டான்.
*********
"ஷிட்.. பவர் கட் ஆஹ்.... இருக்கட்டும் இந்த ரேகார்டிங்கை எல்லோரும் வந்த பிறகு கேட்டு பாப்போம்..." என்று எண்ணியவன். டிடானியா தனியாக இருப்பாளே.. என்றெண்ணி கொண்டு போன் வெளிச்சத்தில் அறையை விட்டு வெளியேறி அவள் அறைக்கு முன்னால் போய் நின்றான்.
"ஹே...டிடானியா..." என்று வெளியில் இருந்து கொண்டே அழைத்தான்.
"ஹா..என்ன.."
"கரண்ட் போச்சே.... வீட்டுல எமெர்ஜெண்சி லைட் எங்க இருக்குன்னு சொல்லேன்..."
"அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை... கொஞ்ச நேரத்தில் வந்திடும்..." என்றாள் கதவை திறக்காமலேயே. உள்ளே அவள் கட்டிலில் குப்புற படுத்து தலையணையை கொண்டு தலையை மூடிக்கொண்டு இருந்தாள். அவளுடைய குரல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து வருவது போல் கேட்கவும் இவனுக்கு என்னவோ போல் இருந்தது.
"ஹே ஆர் யூ ஓகே..."
அவள் ஒன்றும் பேசவில்லை.
"இஃப் யூ டோன்ட் மைண்ட் நான் வேணா உள்ளே வரலாமா? சும்மா பேசிட்டு இருக்கலாம்..." என்றான்.
அப்போதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை... மெல்லமாய் "ம்" என்றது போல் இருந்தது..
"சரி நான் வரேன்.." என்று கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவள் கட்டிலில் குப்புறப்படுத்து இருப்பது தெரிந்தது. தலையை வேறு தலையணையால் மூடிக்கொண்டு இருந்தாள்.
"ஒஹ்ஹ். நான் இங்கே உக்காந்து கொள்கிறேன்." என்றவன் அங்கிருந்த கபோர்டில் சாய்ந்து கொண்டு கீழே உட்கார்ந்தான்.
"தலை வலி எப்படி இருக்கு. ஏதாச்சும் மாத்திரை போட்டியா?" என்று கேட்டான்.
"ஹ்ம்ம் .."என்று பதில் வந்தது.
"ஒருவேளை.. நான் உன்னை டிஸ்டப் பண்ணுறேன்னு தோணினா உடனே சொல்லிடு..." என்றதும் அவள் தலையணையை தூக்கி வீசிவிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.
"சே சே.அப்படியெல்லாம் ஒன்னுமில்லை..."
"இங்க அடிக்கடி கரண்ஸ்ட் கட் ஆகுமா?
"இல்ல... எப்போவச்சும் கட் ஆகும்... இன்னிக்கி வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகுது ஏன்னுன்னு தெரியல்ல." என்றாள்.
நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே... நீ பாக்குறதுக்கு வெளிய ஜாலியான டைப்பா இருந்தாலும் உனக்குள்ள வேறு ஏதோ சோகம் மறைஞ்சி இருப்பது போலவே எனக்கு தோணுது.... அது உண்மை தானா?
என்று கேட்டான்.
"சே சே... அப்படி எல்லாம் ஒன்னுமில்லையே.. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.." என்றாள் பதிலுக்கு..
"சரி... அப்படியென்ன ப்ரொஜெக்ட் ஒர்க் அது... நீ மட்டும் டே நைட் பாக்காம வேலை செய்றே... அவங்க பார்ட்டி அது இதுன்னு ஜாலியா சுத்துறாங்க.." என்று அவனிடம் பூடகமாக கேட்டாள் டிடானியா..
"நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை... நாங்க எல்லாருமே ஆளுக்கொரு வேலையை எடுத்து கிட்டோம்.... அவங்க வேலை இனிதான் ஆரம்பிக்க போகுது..." என்றான்.
"ஒஹ்ஹ்..எந்தமாதிரி வேலை.... உங்களை போல ஸ்டுடெண்ட்ஸ் எல்லாம் ப்ரொஜெக்ட் விஷயமா.. வெளிநாடு போறது.... எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு தெரியுமா?"
"இது எங்க கரியரோட தொடர்பான ப்ரொஜெக்ட்.. அதான் நாங்க இவ்வளவு ரிஸ்க் எடுக்கோம்..." என்று சொன்னான்..
வெறும் போன் வெளிச்சத்திலேயே இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்தது. அப்போது திடீரென ஏதோ பல்லி போல ஒன்று டிடானியா மீது விழுந்திருக்க வேண்டும்.
"ஆவ்.." என்று கத்திகொண்டே பாய்ந்து வந்து ராபர்ட் மடியில் கிடந்தாள் அவள்... அவன் கையில் இருந்த போன் வேறு எங்கோ போய் விழுந்தது.
இருளும் அவள் அருகாமையும் அவனை சுவர்கத்திற்கே அழைத்து சென்றது. அவளும் மௌனமாக இருந்தாள். எழுந்திருக்க முயற்சி செய்ய வில்லை. அப்படியே ஓரிரு நிமிடங்கள் கடந்த நிலையில் திடீரென கரண்ட் வந்துவிட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக