காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 37

இருவர் முகமும் நன்றாக தெரிந்ததும் தான் கரண்ட் வந்ததை இருவரும் உணர்ந்து கொண்டனர்.

கூச்சத்தில் தாறுமாறாக அவனை விட்டு எழுந்துகொண்டாள்...

"ஸாரி....."

"பரவாயில்லை..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கீழே ஹாலில் மற்றவர்களின்  பேச்சு சத்தம் கேட்டதும்.

பார்ட்டிக்கு சென்றவர்கள் வந்துவிட்டார்கள் என்று புரிந்து கொண்டனர்...

"அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல இருக்கு.. ஆனா ஏன்.. இவ்வளவு சீக்கிரமா வந்துட்டாங்க.." என்ற கேள்வியுடன் டிடானியா வெளியே செல்ல இவனும் பின்னாடியே சென்றான்.

கீழே வந்து பார்த்த போது லூதர் அங்கிளை கைதாங்கலாக ஆர்தர் சோபாவில் இருத்தி கொண்டிருந்தான்.

"அப்பா..." என்று பதற்றத்தில் மேலிருந்து வேகமாக இறங்கி வந்தாள் டிடானியா அவருக்கு கையில் அடிபட்டு இருந்தது. அவள் வருவதற்குள் மீரா மருந்து போட்டு கட்டுபோட்டு கொண்டிருந்தாள்.

"அப்பா.. அப்பா.. உங்களுக்கு என்னாச்சு... எப்படி உங்களுக்கு அடிபட்டது?" என்று கேட்டாள். அவரோ அவளுக்கு சரியாக முகம் கொடுக்கவில்லை. ஜெனி மற்றும் மீராவும் அவளை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

"ஜெனி.. மீரா... கேகே... என்னாச்சுன்னு சொல்லுங்க... ஆர்தர் நீயாச்சும்.. அங்க என்ன ஆச்சு என்று சொல்லேன்" என்று பதற்றத்தில் பேசினாள்.

அப்போது கில்கமேஷ் அவளிடம்...

"நீ எப்போ அங்க இருந்து வீட்டிக்கு வந்தே டிடானியா... அங்கிள் உன்னால எவ்வளவு தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிட்டார் தெரியுமா?...." என்று கேட்டான்.

அதற்கு அவள் தடுமாற பின்னாடியே வந்த ராபர்ட்...

"அவளுக்கு உடம்பு சரியில்லை என்று அப்போவே அங்க இருந்து வந்துட்டா... வர்ற வழியில அவள பார்த்தேன்... நானும் அவக்கூட சேர்ந்து வந்துட்டேன்.." என்றான்.

"அட்லீஸ்ட்.. அங்க இருந்த எங்க யாருக்கிட்டவாச்சும் சொல்லிட்டு வந்து இருக்கலாமே!"என்று ஜெனி கேட்டாள்.

"அட நீ யார்கிட்டயும் சொல்லாமலா அங்கிருந்து வந்தே?" என்று ராபர்ட் குழப்பதோடு கேட்டான்.

"அதெல்லாம் இருக்கட்டும்... அப்பாவுக்கு என்னாச்சு..?"என்று மறுபடியும் கேட்டாள். அதன்பின்னர் நடந்த சம்பவம் பற்றி ஆர்தர் விளக்கினான்.

**********

சற்று நேரத்திற்கு முன்னர் நடந்தது.

"இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லையே.. இவங்கெல்லாம் பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்காங்க." என்றாள் ஜெனி.

"சரி..நீ இங்கேயே இரு நான் இவங்கள பார்த்துக்கிறேன்..." என்றான் கில்கமேஷ்.

"ஐயோ... வலியப்போய் அவங்க கிட்ட மாட்டிக்க போறீங்களா. அதெல்லாம் ஒன்றும் வேணாம். போலீசுக்கு போன் பண்ணி சொல்லிக்கலாம்..."என்றாள்.

ஜெனி இப்படி சொல்ல கில்கமேஷ் அவளை பார்த்த பார்வை அவன் என்ன சொல்லவருகிறான் என்பதை அவளுக்கு கணப்பொழுதில் உணர்த்தியது.

"ஒன்றை மட்டும் மறந்து விடாதே... நான் பாதி கடவுள்.... பாவிகளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கொடுக்காமல் இங்கிருந்து போகமாட்டேன்..." என்று விட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தான்.

"ஏதோ இவனை வெகு சர்வசாதாரணமாக எண்ணிவிட்டோமே.... மிகப்பெரிய தேவலோக காளையை கொன்ற மாவீரனாச்சே.... மக்கு மக்கு.. உனக்கு நல்லா வேணும்..." என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.

அங்கு இவன் முன்னாடி போய் நின்றதும் அதுவரை கொள்ளைக்காரனின் கத்திமுனையில் உயிரை பிடித்து கொண்டு நின்ற ஆர்தர் சத்தமிட ஆரம்பித்தான்.

"டேய்....எங்க ஆளு வந்துட்டான்டா.... உங்க எல்லோருக்கும் இனி பரலோக ராஜ்யம் தான்..." என்று ஆர்தர் கத்த கையில் இருந்த துப்பாக்கியால் அவன் வாயிலேயே குத்தினான் ஒருத்தன்.

"ஆர்தர்....!!!!"என்று மீரா அதை கண்டு கத்த அவளுக்கு இன்னொருவன் அறைந்து விட்டு "கத்தாதே!"என்றான்..

"உங்களுக்கு ஒரு தடவை தான் சொல்லுவேன் மரியாதையாக அவங்க எல்லோரையும் விட்டுடுங்க.." என்றான் கம்பீர குரலில் கே கே.

"யார்ரா நீ... நாங்க யாரென்னு தெரியாம எங்க கூட மோதுரே...... சுட்டு பொசுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்... இங்க இருக்குற எல்லோரும் அவங்கவங்க போட்டிருக்குற நகை, வாட்ச்... போன் எல்லாத்தையும் அதுல போடுங்க." என்று அவர்களில் தலைவன் போல இருந்தவன் சொல்ல இன்னொருவன் எல்லோரிடமும் அவற்றை சேகரித்து கொண்டு வந்தான். கில்கமேசுக்கு கோபம் தலைக்கேறியது..

"நான் சொன்னது உங்களுக்கு புரியல்ல..."என்று சத்தமாக கத்தியவன் அங்கு நகைகளை சேகரித்து கொண்டு வந்தவனை முதலில் தாக்கினான். அவன் சுவற்றில் அப்பிய பல்லியை போலவே சுருண்டு விழுந்தான். அதை கண்டு கோபத்துடன் ஒவ்வொருவராக அவனை தாக்க வரவே எல்லோரையும் தன்னுடைய ஸ்டைலில் வெளுத்து வாங்கினான் கில்காமேஷ்.

சண்டையின் போது ஜெனி குறுக்கே ஓடிவந்து எல்லோர் கட்டுக்களையும் அவிழ்த்து விட்டு அனைவரும் நலமாக இருக்கின்றார்களா என கண்காணித்து கொண்டே  திரிந்தாள். அத்தோடு போலீஸுக்கு போன் போட்டு விபரத்தை சொல்லிவிட்டாள். அவர்கள் வருவதற்குள் கில்கமேஷ் எல்லோரையும் கசக்கி பிழிந்து விட்டான். ஆனா சண்டையில் எதிர்பாரா விதமாக லூதர் அங்கிள் லேசாக தாக்கப்பட்டார். கொஞ்ச நேரத்தில் போலீசார் வரவும் மின்சாரம் வரவும் சரியாக இருந்தது.

"இதுதான் நடந்தது.. இன்றைய நாளில் நம்ம நம்ம ஹீரோ காப்பாதிட்டாரு..." என்றான் ஆர்தர்....

மிகப்பெரும் நன்றி உணர்வோடு டிடானியா கில்கமேஷை பார்த்தாள்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்