காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 38

"ஓஹ்..தேங் காட்... அண்ட் யூ கே கே... ரொம்ப நன்றி.. அப்பாவையும் அங்க இருந்தவங்களையும் காப்பாற்றினத்துக்கு!" என்றாள்.

"க்கும்... இவ கிட்ட யாரும் கேட்டாங்களாக்கும்..." என்று முகத்தை வெட்டி கொண்டு மீரா எண்ணினாள்.

"அப்பா... என்னை மன்னிச்சிடுங்க... நான் இப்படியெல்லாம் ஆகும் என்று எதிர்பாக்கல்ல.. ஐ மீன்.. உங்களை வருத்தப்பட வைக்கணும் என்று நினைக்கல... சாரிப்பா..." என்று கூறினாள்.

"தெரிஞ்சி செஞ்சியோ தெரியாம செஞ்சியோ.... உனக்கு உடம்பு சரியில்ல என்று சொல்லுறே.. ஆனா அங்கிருந்து நம்ம கார்ல வராம தனியா ரோட்ல வந்திருக்க... அப்படி என்ன அவசியம் வந்தது???

நல்லவேளை ராபர்ட் தம்பி உன் கூட வந்தான்.... இல்லேன்னா... அட கடவுளே.. என்ன பொண்ணு நீ... உனக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்ததோட விளைவு தான் இது... இனியாவது பொறுப்பா நடந்துக்க கத்துக்கோ." என்றார்.

எல்லோர் முன்னிலையிலும் அவர் இப்படி சொன்னது அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டாலும்.. தான் செய்த தவறுக்கு இது சரியானது தான் என எண்ணிக்கொண்டாள். ஆனால் ராபார்டுக்கு சில சந்தேகங்கள் குழப்பத்தை உண்டுபண்ணின.

லூதர் அங்கிள் கேட்ட கேள்விகள் சரியானது என்றே தோன்றியது. எதற்காக நடந்து வரவேண்டும்???? இவ்வாறு யோசித்து கொண்டிருக்கும் போது ஆர்தர் அவனை உலுப்பி "வா" என்றழைத்து கொண்டு மாடிக்கு சென்றான் .

டிடானியா அப்பாகூடவே அவர் மடியில் சாய்ந்து கொண்டு அழுதாள். அவரும் அவள் தலையை தடவிக்கொண்டே.. அவளை ஆசுவாசப்படுத்தினார். மறுபடியும் எம்மவர்கள் ஒன்றுகூடுவதற்காக ஆண்களின் அறையை தெரிவு செய்தனர். நேரமோ தற்போது 12:23 மணி நள்ளிரவை தாண்டி விட்டிருந்தது.

"இன்னிக்கி என்னெல்லாமோ நடந்து போச்சு.... நீ சொல்லு மோதிரம் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?" என்று கேட்டாள் ஜெனி.

"மோதிரத்தை அவன் கைல பார்த்தேன்... ஜெனி... ஆனா அதைவிட சீரியஸான ஒரு விஷயம் பத்தி நான் பேசப்போறேன்..." என்றான்.

"அங்க என்னாச்சு... உன் மேலே அவனுக்கு ஏதும் சந்தேகம் வந்துடுச்சா என்ன?" என கில்கமேஷும் கேட்டான்.

"நிச்சயமாக இல்ல அவனுக்கு என்மேல சந்தேகம் வந்திருந்தா ஹோட்டலுக்கு அதுவும் அவன் ரூமுக்கே போய் வர என்னை அனுமதிப்பானா?" என்று கேட்டான் ராபர்ட்.

"என்ன!! நீ ஹோட்டலுக்கு போனியா? அங்க கூட மோதிரம் இல்லியா?"என மீரா கேட்டாள்.

"ஹ்ம்ம். அதான் சொன்னேனே.. அதை எங்கே எப்படி வெச்சு பாதுகாக்குறான்னு தெரியல்ல.. ஆனா கடைசியா என்னை டிராப் பண்ணும் போது அவன் கைல பார்த்தேன். அவன் ரூம் சாவியை கொடுத்து அங்க இருக்குற பென்ட்ரைவ் ஒன்ன எடுத்து வர சொன்னான்.... நானும் இதுதான் சான்ஸ் என்னுட்டு அங்க போய் இருந்தேன்... ஆனா அங்க நடந்ததே வேற..."

"என்ன சொல்ற நீ....அப்படி அங்க என்னதான் நடந்திச்சி?" என்று மறுபடி ஜெனி கேட்டாள்...

"நான் சொன்ன சீரியஸான விஷயம் இது தான்... நான் அங்க போய் இருந்தப்போ.. அவன் ரூமுக்கு முழுசா கறுப்பு ட்ரெஸ் போட்டு மூடிக்கிட்டு ஒரு திருடன் வந்திருந்தான்..." என்றதும் மற்றவர்கள் எல்லோரும் ஒருமித்து...

"என்ன திருடனா?"என்று சொல்ல அது கொஞ்சம் ஓவர் சத்தத்தை ஏற்படுத்தி விட "உஷ்." என்று அவர்களின் ஆர்வத்தை அடக்கினான் ராபர்ட்.

"ஆக்ட்சுவலி அது திருடன் கிடையாது... திருடி..." என்றதும் ஆர்தர்.

"என்னடா ஷாக் மேல ஷாக்கா கொடுக்குற... அது சரி அது ஒரு பொண்ணு என்னு உனக்கு எப்படி தெரியும்?"என்று சந்தேகமாக கேட்டான் ஆர்தர்..

"அதானே...வந்தவன் முழுக்க கவர் பண்ணிக்கிட்டு வந்தான் என்கிறே.. பின்னே எப்படி அது பொண்ணு என்னு சொல்லுறே?"

அப்போது ராபர்ட்க்கு வெட்கத்தில் என்ன சொல்வது என புரியாது.

"அதெல்லாம் எதுக்கு நோண்டுரீங்க, நான் தான் சொல்றேனே அது ஒரு பொண்ணுதான்... அது மட்டும் உறுதி..."

"சரி... அப்படியே இருக்கட்டும்... அது சாதாரணமான.. திருடன்... இல்லேன்னா நீ சொல்றமாதிரி ஒரு திருடியா இருப்பாங்க.. இதுக்கும் நம்ம விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்..." என்று ஜெனி கேட்டாள்.

"இருந்தாலும் எனக்கு ரொம்பவே குழப்பமா இருக்கு... மித்ரத் எப்படியும் அங்க இருக்க மாட்டான் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு... ஸ்பெயார் கீஸ் கூட எடுத்து வந்திருந்தா... நான் அவளை மடக்கி பிடிக்க முயற்சி பண்ணப்போ.... என்னை அடிச்சிட்டு தப்பிச்சி போய்ட்டா... நிச்சயமாக அவளுக்கு மித்ரத் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சி இருக்கணும்..." என்றான் ராபர்ட்.

"ஆமா இதை பத்தி நீ மித்ரத் கிட்ட சொன்னியா?"என்று கேட்டாள் மீரா.

"ஹ்ம்ம்..சொன்னேன்... அவன் முகம் வேற மாதிரி போறத்தையும் நான் கவனிச்சேன்.... நானும் அங்க எல்லா இடத்திலேயும் மோதிரத்தை தேடி பார்த்தேன்.. அங்க அது இல்லை.. கடைசியா பார்த்தா அவனே போட்டிருந்தான். ஆனா தொடர்ந்து போட்டு இருப்பானா? இல்ல என்ன பண்ணுவான்னு நம்ம யாருக்கும் சொல்ல முடியாது..."என்றான்.

"நீ சொல்றது சரிதான். அது கொஞ்சம் சிக்கலான மேட்டர் தான்... சரி ஏதோ மீட்டிங் என்றாய்.. அதில என்ன பேசிகிட்டாங்க..?" என்று மறுபடியும் கேட்டாள் ஜெனி.

"ஆஹ்..அவன் என்னை வெளியில இருக்க சொல்லிட்டான்.. அதனால அங்க என்னோட போனை ரெகார்ட் மோட்ல வெச்சிட்டு தான் ஹோட்டல் போனேன்.."

"நல்ல வேலை பண்ணே ராபர்ட்... சரி போனை எடு அவங்க என்ன பேசினாங்கன்னு கேப்போம்.."என்று ஜெனி சொல்ல போனை தேடினான் ராபர்ட்.

"இங்கதானே வெச்சிருந்தேன்... எங்க போச்சு..." என்றவனுக்கு முன்னர் நடந்தது நியாபகம் வர.. "அடச்சே.." என்று தலையில் கைவைத்து எல்லோரையும் பார்த்து பேந்த பேந்த முழித்தான் ராபர்ட்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்