சிதையும் சீலங்கள்

இழுத்து வைத்துக் கொண்டு இச்சை தீர்க்க, இளைப்பாறும் மூச்சல்ல இது.. இல்லறம் புகும் இந்நாணம் தேடும், இலக்கியம் கூறும் புதுமையல்ல இது..

இடர்க் கொண்டு இன்னலுறும் இன்னார் கண்டு, இடப்பக்கமாய் திரும்பும் மூஞ்சல்ல இது.. இழையோடித் தொக்கி நிற்கும் இரு தசாப்த நூற்றாண்டு. சொல்லும் தரமான தவமிது......

பாரும் புரண்டோடும் பின்னால், அப்பாவை கண்ணியமோ? ஞாலமிழந்து நிற்கும், ஞானமா? - ஐயோ!!

எது எதுவெல்லாம் எகத்தாளமாய், எள்ளி நகையாடுது எழுத்துக்களாய், - அச்சோ!!

உனக்கென்று புரட்டிக் கொள்ள, உது கூட இல்லையா? நீயென்று தன்மானம் தட்ட, நீலியாய்க் கூட தொல்லையா?

பண்பாடு, பழக்கதோசம் பேசிப் பேசி, பல்லுக் காட்டி நிற்பதுதான், பதின்மத்தின் பசியோ??

படிப்பும், பணமும், ஈன்றெடுத்துக் கொண்டது - திமிரை.. பதவியும், பலமும், பறித்தெடுத்துக் கொண்டது - அதிகாரமதை..

இதனால், பாலும், பழமும் தேடி நிக்குது வெண்மையை.. பிறந்த பிஞ்சும், சிதைத்து நிக்குது சீலமானதொன்றை....

Afham Ameer Ali Kattankudy வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்