திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 02

இவ்வளவெல்லாம் ஆசுவாசப்பட அப்படி என்னதான் செய்து விட்டான்? அவன் மனம் கொண்ட சருகல் தான் இவ்வளவுக்கும் காரணம். அந்த வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாதலால் சுந்தரும் அவனுடைய நண்பர்களும் கடற்கரையோரமாய் சென்றிருந்தனர். அச் சவூதி மண்ணிலே இவர்களைப் போல கடல் காண வந்தவர்கள் பலர். சிலர் கதைத்துக் கொண்டும், ஏதேதோ சாப்பிட்டுக் கொண்டும், விளையாடிக் கொண்டுமென அக் கடற்கரை சுறுசுறுப்பாய் தானிருந்தது. சுந்தரும் நட்புக்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாய் இருந்த பொழுதது. நேரம் சிறிது நகர,

"ஆய்"

எங்கிருந்தோ எதிர்பாராது வந்த பந்து சுந்தரின் கன்னத்தை பதம்பார்த்திட்டு. திடீர் தாக்குதலால் அதிகப்படியான வலியை உணர்ந்தான். கோவமாய் எழுந்து நிற்கவே "மன்னிச்சிடுங்க" என்ற ஒற்றை வார்த்தையோடு அழகே உருவாய் முன்னாடி நின்றாள் அவள். சிறிது நேரம் மெய்மறந்து அவள் முன் நின்றிருந்தவன்,

"இல்ல பரவல்ல" வந்த கோவம் எங்கோ பறக்க, சிட்டாய் பறந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா அவளயே பார்த்துட்டு இருக்க?" பக்கத்தில் நின்றிருந்ந நண்பன் சுரேஷ் ஆச்சரியமாய் சுந்தரைப் பார்க்க, "என்ன அழகுடா.." சஞ்சலம் கொண்டான்.

ஆஹ் ஹா.. நட்புக்கள் கேலி செய்ய நடப்புக்களை இனித்தான் பார்க்க வேண்டும். மனைவி, அழகான குழந்தை, அக்கறையுள்ள குடும்பம் என எல்லாமிருக்க இவன் உள்ளம் கொண்ட கலக்கமும் அதன் விளைவுகளும் தான் கதைக்கு உயிர் கொடுக்கப் போகின்றது.

இங்கு சுந்தர் அந்த பெண்ணின் நினைவுகளை சுமந்தவனாய், அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்க, அவளை மீண்டும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அவ்வளவு இலகுவாய் வாய்க்குமென அப்பொழுது தெரியாது.

கதை தொடரும்… Ruwaiza Razik வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்