சுந்தரை கண்டு திடுக்கிட்டுப் போனவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "என்ன இங்க?" கையால் சாடைபோட, அப்பொழுது தான் அவனுக்கு சுயநினைவே வந்தது.
"அ...து.. அது.. அது வந்து?
என்னா?
ஆஹ் இந்த நேரத்துல தூங்காம என்ன செஞ்சிட்டு இருக்க?
நான் என்ன செஞ்சாலும் உங்களுக்கென்னா?"
அவனுக்கு என்னமோ போன்றாகி விட்டது.
"இல்ல அது..."
"நீங்க ஒன்னும் சொல்லத் தேவயில்ல. முதல்ல இங்க இருந்து போறீங்களா? பிளீஸ்…"
எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றான் சுந்தர். ஆயினும் களைத்து, சோர்ந்து போயிருந்த அவள் வதனத்தை அவனுக்கு மறக்க முடியாமல் இருந்தது.
"இவள் யாரு? என்ன வேல பாக்குறாள்? பெமிலி பெக்ரௌவ்ன் என்னா?" எல்லாமே முதலில் தெரிந்து கொள்ள பிரயத்தனப்பட்டான்.
மீண்டும் ஒருமுறை எப்படியாவது அவளை சந்திந்து கொஞ்சம் பேச்சுப்போட வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்தவனின் ஏக்கம் தீரும் வகையில் அவளே தான் வந்தாள்.
“என்னங்க..”
அவள் நினைப்பிலேயே திரும்பியவன் அவளைக் கண்டதும் பிரமித்துப் போனான். அவனுக்கு பேச்சு வரவில்லை. அவளே மீண்டும் தொடர்ந்தாள்.
"உள்ள வரலாமா?"
"ஆஹ் தாராளமா வாங்க..."
சின்னதாய் புன்னகையுடன் உள்ளே வந்தாள். சுந்தரின் மௌனம் நீண்டது.
"நான் உங்ககிட்ட சொறி கேட்டுட்டு போக வந்தன்."
"எ.. எதுக்கு?"
"அப்படி பேசி இருக்கக் கூடாது. நீங்க காலையில அந்தப் பக்கம் வந்ததும் நான் நல்லா பயந்துட்டன்."
"நான் அத பொருட்படுத்தவேயில்ல." சிரித்துக் கொண்டான்.
"சரி அப்போ நான் போய் வாரன்.."
'இப்பொழுதே இவளுடன் பேச்சுக் கொடுத்தாள் தான் இவளைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்' தனக்குள் நினைத்தவன் தாமதிக்க விரும்பாமல்,
"ஆஹ் உங்க பெயர் என்னா?
"வத்சலா.."
"ஹாய் வத்சலா ஐ யம் சுந்தர்."
"சுந்தர் வன்ச் அஙைய்ன் ஐ யம் சொறி.."
"இட்ஸ் ஓகே.."
சரி நீங்க தப்பா எடுத்துக்க இல்லன்டா உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?"
அவள் மௌனமே சம்மதமாய் வாடாத வதனத்தோடு அவனை நோக்கினாள்.
"வத்சலா உங்களப் பற்றி தெரிஞ்சிக்க ஆவலாயிருக்கு. சொல்லுவீங்களா?
அவள் முகத்தில் திடீர் மாற்றம். இதழ்கள் மெதுவாக சுருங்கிக் கொள்ள, தலையை குனித்துக் கொண்டாள்.
"வத்சலா நான் ஏதும் தப்பாகக் கேட்டு விட்டேனா?" பதறிப் போனான் சுந்தர்.
அவள் பேசவில்லை. அந்த அழகிய கண்கள் பேசியன. கண்ணீர் கன்னத்தை நனைக்க, நன்றாய் நொந்து போயிருப்பதை அவள் நிலைமை உணர்த்திட்டு..
"வத்சலா என்ன இது?"
அவளை நெருங்கினான்.
"வத்சலா.. வத்சலா.."
இருவருக்குமிடையிலான நெருக்கம் இன்னும் அதிகமானது..
கதை தொடரும்… Ruwaiza Razik வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
கருத்துகள்
கருத்துரையிடுக