திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 05

வத்சலா என்ன இது?

அவளை நெருங்கினான்.

வத்சலா.. வத்சலா..

இருவருக்குமிடையிலான நெருக்கம் இன்னும் அதிகமானது. அவளுக்காதவராய், ஆறுதலாய் சுந்தர் அவளை மெதுமெதுவாக நெருங்கிப் போக, தன்னிலை உணர்ந்தவள் திடீரென எழுந்து நின்றாள்.

"என்னம்மா?

ஏதோ தப்பா தோணுது நான் போய் வாரன்" வெளிச்செல்ல எத்தனித்தவளின் கையை இருகப் பிடித்துக் கொள்ள நடுங்கிப் போனாள் வத்சலா.

"என்ன விடுங்க"

"நீ என் வத்சலா உன்ன எப்புடி இந்த நிலைமையில அனுப்புவன்?"

"நான் யாருக்கும் வேண்டப்பட வாய்ப்பில்ல சுந்தர். என்ன விடுங்க பிளீஸ்."

"நீ எனக்கு வேண்டப்பட்டவள் வத்சலா, என் கூட இரி"

சுந்தர் அவளை இழுத்து இருக அணைத்துக் கொண்டான். அவளால் நகர முடியவில்லை. ஆனால் என்றுமில்லாத ஆதரவை அன்றுணர்ந்தாள். அந்த பிடியிலிருந்து  விடுபட அவளுக்கும் அப்பொழுதைக்கு பிரியம் இருக்கவில்லை.

"என்ன இருந்தாலும் என்கிட்ட சொல்லு வத்சலா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உனக்காக ஒன்னும் செய்ய மாட்டேனா?" இயல்பிலேயே இலகி விடும் பெண்களுக்கு மத்தியில் வத்சலா மட்டும் விதிவிலக்கில்லையே. சுந்தரின் பிணைப்பும், நெறுக்கமும், அன்பு கலந்த வார்த்தைகளும் அவளை சற்று இறங்க வைத்திட்டு.

"எங்க பெமிலியில நான் தான் மூத்தவள். எனக்கு அப்புறம் இளையவர்கள் ரெண்டு பேர் இருக்காங்க. வாப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாரு. தனிமரமா இயங்க என் தாய் ரொம்ப கஷ்டப் பட்டாங்க. என்மேல அவங்களுக்கு பெரியளவு பிரியமும் இருக்கல்ல. எப்பவுமே வெளிநாடு போறியான்னு கேப்பாங்க. நான் படித்து நல்லா வரனும்னு ரொம்ப ஆசப் பட்டன். ஆனா எங்க வீட்டு சூழல் இடம் தரவேயில்ல. உம்மா யார் கூடவோ பேசி, என் வயத அதிகப் படுத்தி பாஸ்போர்ட் செஞ்சி அனுப்பினது தான் இங்க வந்துட்டன். ஆனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" அவள் வார்த்தைகளில் நிறைந்த ஏக்கம் அவனையும் கவலைப் படுத்திட்டு.

"நான் இனி உனக்காக இருப்பன். ஒன்னும் கவல வேணாம் வத்சலா 'சுந்தரின் வார்த்தை அவளை தைரியப் படுத்திவிட அவளே அவன் மார்பில் சாய்ந்து கொண்டான்.

மெதுவாக இருவருக்குள்ளும் காதல் மலர, தனிமையில் சந்திப்பதும், ஒன்றாக வெளிச் செல்வதும் இருவரினதும் பொழுதுபோக்காகி விட்டது.

சுந்தர் ஏற்கனவே திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தந்தை என்பதை அறியாத வத்சலா அவனே உலகமென வாழத் துவங்கினாள். இப்படியே நாட்கள் நகர, அன்று சுந்தருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

"சுந்தர் சுந்தர்" கலங்கிய கண்களோடு ஓடி வந்தாள் வத்சலா.

கதை தொடரும்… Ruwaiza Razik வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்