நண்பனே!!!

ஏய்..... மனிதனைத் தேடும் நண்பனே உன்னைத்தான் நான் என் முகம் பார்க்க பரிந்து கொள்கிறேன் உன்னை

நான் பாவம் என் முகத்தை ஒரு முறை பார் என்னைப் பார்க்க நீ நீயோ விரும்பவில்லையென்றால் எனது நானைப் பார்.

உனது உண்மை தேடும் காதினுள் நீர் அடைந்திருக்கும் பஞ்சுகளை சற்று mதிலிருந்து வேறாக்கு

உனது கேள்விக்கு எனது பதில் நான் மனிதனாகவே வாழ்கிறேன் எனது மனச்சாட்சிப்படி கூறுகிறேன்

ஆனால் நான் இன்னும் உலகைப் பார்கவில்லை எனது கண்கள் என்னிலிருந்து திறக்க விரும்பவில்லை நான் விரும்புகிறேன் திறந்து பார்க்க கண்களை ஒரு முறையாவது

தடவித்திருந்த தின்னையில் உனளையும் கண்டேன் ஒரு மனிதன் என்று யாரெல்லாம் அனைத்து கிடக்க உன்னில் அவர்கள் இன்னும் ஒரு சிலரையும் கண்டேன் பெயர்களை உச்சரிப்பதில் உளம் பயப்படுகிறது அவர்கள் கூறினார்கள் பெயரை உச்சரிக்க வேண்டாமென்று

நான் சத்தியவாக்கும் கொடுத்தேன் பெயர் உச்சரிப்பதில் அவர்களின் விருப்பத்தை அதில் எத்தனை பேர் இறுதிப் பயணம் எய்தார்கள் என்றும் புரியவில்லையான்.

நான்... நாமாக... முயற்சிக்கிறேன் முடியவில்லை முடியவில்லை அதலால் உனது கேள்வியில் நானும் பங்கு கொள்ள பரிந்து கொள்கிறேன் முடியமாயின் நீ பொருந்திக் கொள்... முடியாது என்றாலென்ன நீ... நீதான் ஒருமனிதனிடமிருந்து ஒரு மனிதன் விடை பெறும் புன்னகையுடன் விடைபெறுகிறேன். நண்பனே!!

நழீம் ஏ சுல்தான். மாவடிப்பள்ளி வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்