அன்று அவள் எனக்குப் பிடித்த நீலநிறத்தில் வர்ணிக்கமுடியா அழகியாய் உருப் பெற்றிருந்தாள் வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் முழு நிலவு அவள் வடிவில் அன்று
புன்னகையின் சொந்தக்காரி பூப்போன்றவள் பட்டு என்னவோ அவள் நிறம் பாவை நானே பரவசமடைகிறேன் பாரினில் ஆண்கள் அவள்மேல் போதைகொள்வதில் ஆச்சரியமில்லை எனக்கொன்றும்...🌼
இளம் கீறல் இதயப்பாடல் இதழ் பூக்கையில் -நின் இருதயம் ஒரு கணம் நின்றிடும்
வதனத்தின் வாசணையில் வசீகரமாய் ஈர்ப்பவளே வட்டநிலா நீயே வடிவானவள் உம் முக அழகொன்றே போதும் பாதித் துன்பம் மறந்திட
மாஷாஅல்லாஹ்
கருத்துகள்
கருத்துரையிடுக