மகா நடிகர்கள்

மாறுபட்ட பூமியில் நிறம் மாறி உடல் மாறி இனம் மாறி இருதயமும் மாறிவிட்ட மாற்றுத் திறனாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

தன்னோடு வரும் நிழல் நீயென ஆத்மார்த்தமாய் உரைத்திருப்போம் நம் பங்காளிகளை

நம் முட்டாள் தனம் நம் நிழல் நம்மைப் போலல்ல ! சாயம் பூசாமலே திரைமறையில் நடனமாடிக் கொண்டிருக்கிறது நம் கண் முன்!

ஆஹா! அற்புதம்! அருமை! என நாம் புகழ்ந்திருப்போம் ஆனால் எல்லாம் நன்றாக பழகிய நாடகக்காரர்கள் என்று தொடர்கதையில் வில்லன் வில்லியை போன்ற சில உறவுகள் என போக போகத்தான் புரிந்திடும்.... அப்போது ! இழக்கக் கூடாதவை தானும் இழந்திருப்போம் அவர்களுக்காய்

தேறிய அறிவு தேடாமலே நிறைந்திடும் அனுபவம் எனும் ஆராய்ச்சியினூடே... விழித்திட்டோம் இன்று.... நிறம் மாறும் மனிதர்களிடம் நாம் நல்ல புனிதர்கள் என்று காண்பிக்க....

கவிச்சாரல் சாரா புளிச்சாக்குளம்

கருத்துகள்