வாழ்வின் வலிகள்

வாழ்வின் வலிகள் இயல்பினை சூழ்ந்து இன்பங்களை உறிஞ்சிக் குடிக்கையில் இதயம் தொடும் உறவாய் இவள் முன்னால் நீயும் வந்தாய்

இழப்பின் எல்லைகளை அதீதகமாகப் பார்த்து இனியெதுவும் இல்லையென்ற நிலையில் அழைப்போடு நீயும் வந்து அல்லல் பலதை குறைத்தாய் கத்தியான கலியுகத்தைக் கடக்க புத்தியென்பதில் புதுமைகளை நிறைத்தாய்

பொறுமையின் எல்லையைக் காட்டி நின்றாய் வெறுமையின் வெளிகளை போற்றி வென்றாய் கர்வத்தில் கூட உன்னில் கடுஞ்சொல் நான் கண்டதில்லை தனிமைத் தீயில் என்னை நீ தவிக்க விட்டதுமில்லை

நாம் நட்புக் கொண்டு வாரங்கள் தாண்டி மாதங்களை கடக்கையில் மனதிற்குள்ளே ஓர் எண்ணம் உன்னை வருடங்கள் தாழ்த்தி சந்திக்காவிடின் வலிகளெனக்கு சொந்தமாயிருக்காது

படைத்தவன் நாட்டம் தான் நீயென்னை பாதியிலே சந்திக்க வேண்டுமென்பது பரவாயில்லை இப்படியே இருப்போம் மீதமுள்ள காலம் வரை ....

ஸாஹிரா பானு வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்