விலைக்கு போகும் மணமகன்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் இவ்வுலகில் மனிதர்களை சந்தோசமாக வாழச்செய்ய அகிலத்தாரின் அரசனாகிய அல்லாஹ்வாள் எங்களுக்கு வழங்கப்பட்ட புனித மார்க்கம் மனித சமுதாயத்தின் சுபிட்சமான வாழ்க்கைக்குறி வழியினை அமைத்துத்தந்த உன்னத மார்க்கம். இவ்வுயரிய மார்க்கத்தின் மூலம் இறைவன் இந்த மனித சமுதாயத்திற்கு போதிக்கப்பட்டிருக்கும் போதனைகளும் சட்டங்களும் எக்காலத்திற்கும் பொருத்தமானவை அவ்வாறு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சட்டங்களுள் ஒன்றுதான் இவ்விடத்தில்

“பெண்களுக்கு அவர்களின் மனக்கொடைகளை கட்டாயமாக கொடுத்துவிடுங்கள். அவர்களாக மனம் வந்து ஏதாவது விட்டுத்தந்தால் மனநிறைவுடனும் மகிழ்வுடனும் அதை உண்னுங்கள்.” (4:4)

இறைவனின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்படி என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ளார்கள். அதாவது நபி (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட பின் அவர்கள் மணந்த திருமணங்கள் அனைத்திலும் மஹரைக் கொடுத்தே மனமுடித்து இருந்தார்கள் இன்னும் தங்களது பெண்மக்களுக்கு மஹரைப்பெற்றுத்தான் திருமணமுடித்து வைக்கின்றார்கள். மேலே குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனமும் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையும் ஒரு பெண்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அப்பெண்னுக்குரிய மஹரைக் கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. ஆனால் இந்த சட்டம் மாற்றப்பட்டு பெண்களிடமிருந்து ஆண்கள் மஹர் பெற்று திருமணம் செய்கின்ற கலாச்சாரம் இந்த நாட்டிலே வேகமாக பரவுகின்றதை நாம் பார்க்கலாம்.

வரதட்சனையின் வளர்ச்சி

இக்கலாச்சார கொடுமை நம் சமுதாயத்தில் வேகமாக வளர்ந்து வரக்காரணம் பெண்னைப் பெற்றவர்களே! ஒரு காலத்தில் வரதட்சனை என்ற வார்த்தையே தெரியாமல் தான் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சிலர் தங்களின் பெண் மக்களை திருமணம் முடித்துக் கொடுக்கும் போது தங்களது அந்தஸ்தை காட்டுவதற்காகவும் மகள் செல்கின்ற வீட்டில் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதாகவும் அவளை திருமணம் செய்யும் ஆண் அவளுடன் அன்பாக இருக்க வேண்டும் என்பதாகவும் திருமணமுடித்து கணவன் வீட்டிற்குச் செல்லும் போது அவளுக்கு தன் மருமகனுக்கும் தேவையான பொருட்களையும் செல்வத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். இதன் விளைவாக வரதட்சனை எனும் கொடுமை ஆரம்பமாகியது. இது குறுகிய காலத்தில் காட்டுத்தீ போல் பரவ இன்று பல உயிர்கள் இவ்வினிய மார்க்கத்திற்கு முரணான முறைகளில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது நாளடைவில் நிர்ப்பந்தமான வழக்கமாக மாறி வரதட்சனை கொடுத்தவர்கள் கேவளமானவர்களாகவும் கஞ்சத்தனம் உடையவர்களாகவும் மக்களால் கருதப்பட்டனர். கருதப்படுபவர் திருமணத்திற்கு முன்பாகவே மணமகனின் தகுதியை வைத்து பேரம் பேசப்படும் இழிவு நிலைக்கு இந்த சமுதாயத்தை இழுத்துவந்துவிட்டது.

வளர்ந்துவிட்ட இந்த வரதட்சனை கொடுமை இந்த சமுதாயத்தில் சீரிழிவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த அவலநிலையை நடுநிலையான கண்ணோட்டத்தில் சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக இதை கட்டாயம் வெறுத்து ஒதுக்குவான்.

இந்த வரதட்சனையால்

  • இந்த வரதட்சனைக்கு அஞ்சி இன்று எத்தனையோ பெண்கள் குழந்தைகளை பெற்றோர்கள் கொலை செய்கின்றனர்.
  • வட்டிக்கு கடன் வாங்கும் வரதட்சனை கொடுத்துவிட்டு வாங்கிய கடனையும் வட்டியையும் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்து கொண்டு தூய இஸ்லாத்திலிருந்து வெளியாகும் மனிதர்கள் அதிகம்.
  • இந்த வரதட்சனைக் கொடுமையால் தனது வாழ்வை துரக்கும் கன்னிப்பெண்களும் பெற்றோர்களும் அதிகம் அதிகம்.
  • வாயையும் வயிரையும் கட்டிச் சேர்த்து வைத்த சொத்துக்களை வரதட்சனையாக வார்த்துவிட்டு வீதிக்கு வந்த குடும்பங்கள் அதிகம்.
  • வரதட்சனையை கேட்டு அதைக் கொடுக்க முடியாததால் வறுமையின் உச்ச நிலையை உணர்த்தும் வாலிபர்கள் விபச்சாரங்கள் செய்வதும் சாதாரணம் ஆகிவிட்டது.
  • வரதட்சனை எனும் கொடுமையால் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் இவை போன்ற அவலங்களும்¸ சீரழிவுகளும் ஏராளம் தாராளம்.

வரதட்சனையால் ஏட்பட்ட இழிவுகளுக்கு மறுமை நாளில் அதற்கு காரணமான அணைவரும் வல்ல அல்லாஹ்வின் முன் கண்டிப்பாக பதில் கூற வேண்டும். பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேரி ஓடிவிடுகின்றனர். 18 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு எங்கும் பெண்கள் 40 வயது வரை கூட திருமணம் முடிக்காத நிலையில் உள்ளனர். ஒரு வீட்டில் ஒரு பெண் ஓடிவிட்டாள் மீதியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலையேட்படும். இதிலும் வரதட்சனை எடுப்பவர்களுக்கு பங்கு இருக்கின்றது. வரதட்சனையால் ஏற்பட்ட மேற்கண்ட இழிவுகளை நாளை மறுமையில் இதற்கு காரணமான அனைவரும் வல்ல அல்லாஹ்வின் முன் கண்டிப்பாக பதில் கூற வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆண்மகனின் பெற்றோர்களே!

உங்கள் மகனைப் பெற்று படிக்கவைத்து பட்டதாரியாக்கியது திருமணத்தில் ஏலம் பேசுவதற்காகவே ஆண் மகனை பெற்றுவிட்டோம் என்ற தைரியத்திலே பல கோடி இலட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்று மனமகனின் பெற்றோரிடத்தில் கேட்பதில் சரிதானா? உங்களுக்கு வெட்கம் இல்லையா? இல்லர சுஹம் அனுபவிப்பது மணமகள் மட்டும்தானா? உங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்து உங்கள் குடும்ப சந்தோசம் மற்றும் துக்கங்களில் பங்கேட்கும் அப்பெண்மனியிடமா பணம் கேட்பது? இக் கேள்விகளை அவர்களிடம் கேட்டாள் “என் மகன் சந்தோசமாக இருக்கத்தான்” என்கிறார்கள். அவர்களை நோக்கி “பிறரை வறுத்தி தன் மகன் நலமாக வாழ வேண்டுமா?” இவைகளை செய்துதான் உங்கள் மகனை திருமணமுடித்துவைத்தாலும் மணமகனின் குடும்பத்தில் உங்கள் மகனுக்கு மரியாதையும்¸ மதிப்பும் இருக்குமா? நீங்கள் வாங்கும் வரதட்சனையால் உங்கள் மகனின் கண்னியம் குலைகின்றது. தீமைக்கு துணைபோய் விட்டாயே என்று நாளை அல்லாஹ் கேள்வி கேட்கும் போது தலைகுனிந்து குற்றவாளியாக உங்கள் மகன் நிற்கும் நிலை ஏற்படும்.

அழிந்து செல்லும் பணத்திற்காக¸ செல்வத்திற்காக மறுமையிலும் உங்கள் மகனை அவலநிலைக்கு உள்வாங்குவதுதான் வரதட்சனை இதுதான் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுக்கும் நல்வாழ்க்கையா? சற்று சிந்தித்துப் பாருங்கள் அல்லாஹ்வை பயப்படுங்கள்.

“எவன் தன் இரட்சகன் முன் நிற்பதை அஞ்சி மனோ இச்சையைவிட்டு தனது ஆத்மாவை பாதுகாத்துக் கொள்கிறாரோ¸ அவன் தங்குமிடம் சுவர்க்கமாகும்” (79:40¸41)

என்று அல்லாஹ்வாக்குறுதி வழங்குகிறான் உலகத்தில் வாழும் போது பணம்¸ செல்வ ஆசைகளை உதரித்தள்ளிவிட்டு அல்லாஹ்¸ றஸூலுடைய வழிமுறையில் வாழ வேண்டும் இவ்வாறு வாழ்ந்தால் தான் விளைவாகத்தான் இன்று சமுதாயத்தில் மிக வேகமாக வரதட்சனை பரவியிருக்கின்றது. இது அழிக்க முடியாத ஒரு செயலாக மாறிவிட்டது என்பது கசப்பான ஒரு உண்மையாக இருந்தாலும் இதை நாம் அழிக்க வேண்டிய நிர்ப்பந்;தத்திற்கு ஆளாகியுள்ளோம்.

வரதட்சனையில் உலமாக்களின் பங்கு

தங்களை ஆலிம்கள் என இனம் காட்டிப் பணத்திற்காக கொள்கையை விற்கும் ஆலிம்களே! தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரதட்சனையை ஒழிக்க முடியாத ஜமாத்தினர் வரதட்சனைப் பணத்தை வாங்குவதற்கு நிச்சயதார்த்தம் என்ற நிகழ்சியை ஏற்பாடு செய்து பெண் வீட்டார்களிடமிருந்து வரதட்சனை பணத்தை வாங்கி அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஜமாத்தினர் அனைவரும் அதைத் தொட்டு ஆசிர்வதித்து கடைசியில் மணமகனின் பெற்றோர்களுக்கு கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வரதட்சனையை பகிரங்கமாக வரை வைத்தனர். இன்னும் அதைவிடக் கேவளம் என்னவென்றால் ஒரு சில ஜமாத்தார்கள் மணமகன் பெறும் வரதற்சனைப் பணத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு சதவீதத்தை தனக்கு பெறுகின்றனர். இதை நாவு கூசாமல் கேட்டு வாங்கும் அவலநிலையையும் சில ஊர்களில் இன்றும் நாம் காண்கிறோம். இந்த வரதட்சனையை வளர்க்கும் ஆலிம்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். இன்று சமுகத்தில் சிறந்த ஆலிம்களும் உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

“அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அவர்களுடைய கோரிக்கைக்கும் இறைவனுக்கும் இடையே எத்திரையும் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.” (நூல் புஹாரி)

அநீதியிலைக்கப்பட்டவரின் சாபத்தை தவிர்த்து அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ஆலிம்களே!

ஆலிம்களே நீங்கள் மார்க்கத்தை உணர்ந்தவர்களா? மக்களுக்கு நன்மையை ஏவ விரும்புகிறீர்களா? சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் பொறுப்புக்களை உணர்ந்து கடமையாக்குங்கள். உங்கள் அறிவையும் ஞனத்தையும் பேச்சாற்றலையும் பயன்படுத்தி வரதட்சனைக்கு எதிராக அதிகமாக பிரச்சாரம் செய்யுங்கள். உங்களது ஜூம்ஆ மேடைகளை இந்தப் பாவத்திற்கு எதிராக பயண்படுத்துங்கள் இவ்விடத்தில் ஆலிம்கள் எனும் போது இறையச்சம் இல்லாது பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயற்பட்டவர்களை சொல்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

NAFEES NALEER ( IRFANI, SEUSL) EDITOR OF VIYOOHAM MAGAZIN வியூகம் வெளியீட்டு மையம்

 

கருத்துகள்