வெற்றிக் கேடயங்கள்!

இலக்கியம் இலக்கணம் சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள் தலைக்கணத்தோடு இயக்கம்! தலை கால் புரியாத மயக்கம்!

நீதி நிலைநாட்ட வேண்டியவர்கள் நிதியோடு விளையாட்டு! பாவம் பச்சிளம் பாலகர்கள் விளையாட்டு பருவம் தான்! விளையாடி வெற்றிக் கேடயங்கள் பற்பல பெற்றிட ஆர்வம் ஆசை!

அனைத்திற்கும் சமாதி கட்டி சமாதானம் கற்பிக்கும் ஆளுமை மிக்க அதிபர்! அயர்ந்த உறக்கமோ ஆசிரியர் குழாம்!

நியாயங்கள் சமாதியாவதை சகிக்க முடியவில்லை! அநியாயங்கள் உயிர் பெறுவதை பொறுக்க முடியவில்லை!

பதித்துவிட்டேன் எழுத்தில்! பார்த்துப் படித்து விட்டு பாங்காய்ச் செயற்படுங்கள்! பண்பான பொறுப்பானவர்களே!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால அதிபர் -SLPS -2 மே.மா/களு/சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலை பேருவளை

கருத்துகள்