நவீன விஞ்ஞானம்¸ அறிவியல்¸ மருத்துவம்¸ கலை¸ கலாசாரம் எனப் பல்துறைகளிலும் மனிதன் தனது உச்சகட்டத்தை அடைந்து கொள்ள சென்று கொண்டிருக்கிறான். இதிலும் குறிப்பாக மனிதன் மீடியா என்ற ஊடகத் துறையில் அதிகமாக உச்சட்தை அடைந்து வருகின்றான். உலகில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்ற முதன்மை துறையாக இந்த மீடியா காணப்படுகின்றது.
இந்த ஊடகத்துறையை மனிதர்கள் அனைவரும் ஏற்று சாதாரணமாக தற்காலத்தில் பயன்படுத்திவருகின்றனர். தற்காலத்தில் பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் மனிதன் வரை இந்த மீடியா சம்பந்தப்பட்ட விடயங்களை ஏதோ ஒரு வகையில் உபயோகிக்க தெரிந்து வைத்துள்ளனர். அந்த வகையில் மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதன் தற்கால வளர்ச்சி என்ன? அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துவது சிறந்தது? அதன் நன்மை தீமைகள் பற்றி ஒரு பார்வையை இந்த கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்த முயல்கின்றேன்.
மீடியா என்றால் என்ன?
உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள்¸ தொலைக்காட்சி சேனல்கள்¸ திரைப்படம்¸ வீடியோ கான்ஃபிரன்சிங்¸ இணையத் தனிநபர் பிரச்சாரம்¸ வானொலி¸ கணணி மற்றும் அலைவரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக்கருவிகள்¸ ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் மீடியா என்ற கருத்தில் அடைக்கி விடலாம். இதனையே ஊடகங்கள் என்பர்.
ஊடகங்களின் அவசியம் என்ன?
ஊடகம் ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் திறை¸ குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அல்லது அந்த சமுகத்தின் வளர்ச்சிக்கம் வித்திடுகின்றது. சில சம்பவங்களை எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் ஊடகத்துறையின் அவசியம் என்ன என்பதை தான் அனுமானிக்கலாம்.
இந்தியாவின் - ஆசிபா விவகாரம், சிரியா விவகாரம், மியன்மார் விவகாரம் இவைகள் அனைத்தையும் இவ் உலகத்திற்கு படம் பிடித்து காட்டியது இந்த ஊடகங்கள் தான் எங்கு நல்லவை நடந்தாலும் தீயவை நடந்தாலும் முதன் முதலாக இந்த ஊடகங்களின் மூலமாகவே தான் வெளி வருகின்றது. எனவே தான் ஊடகங்கள் எமக்கு மிகவும் அவசியமாகிறது.
ஒரு வினாடியில் இணையத்தில் நிகழ்பவை 28¸935 இன்ஸ்டக்ராம் புகைப்பட லைக்ஸ் 4¸86¸111 வட்சப் தகவல் பரிமாற்றம் 12 கையடக்க தொலைபேசியில் சமூக ஊடக பாவனையாளர்கள் 469¸445 பேஸ்புக் லைக் 7¸203 டிவீட் 4¸745 ஸ்னப்சட் இல் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன 305 ரெடிட் வாக்குகள் 24¸88¸887 மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன 35¸069 இணைய ட்ராபிக் 54¸319 கூகுல் தேடல்கள் 122¸373 யூடியூப் காணொளிகள் பார்வையிடப்படுகின்றன. 2121 ஸ்கைப் அழைப்புகள்
அண்மைக்கால சமூகஊடகங்களின் (Social Media) பலரது பொறுப்பற்ற செயற்பாடுகள் ஒருவகையான பதற்ற நிலையை அதிகரிப்பதாக அமைந்துள்ளன. இதனை ஒழுங்குறக் கையாளாவிட்டால் நிலைமை தலைக்கு மேலே செல்லும் அபாயம் இருக்கிறது. இந்த விடயத்தில் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதை ஞயாபகப்படுத்துகின்றோம். ஆத்துடன் தற்போதைய சூழலில் சமூக ஊடகங்களைப் பயண்படுத்துபவர்கள் பேண வேண்டிய சில வழிகாட்டல்களை தேசிய சூறா சபை முன் வைக்க விரும்புகிறது.
சமூகத்தை ஒற்றுமைப் படுத்தி ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சமூக ஊடகங்களால் முடியும். இலங்கை முஸ்லிம் சமூகம் சமூக ஊடகங்களை இன்னும் இந்தத் துறையில் போதுமானளவு பயன்படுத்தவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.
நல்ல விளைவுகளைத் தராத எந்தச் செயற்பாடுகளும் வீணானவையே வீணான செயற்பாடுகளில் ஈடுபடுவது முஃமினுடைய பண்பு அல்ல. தான் முஃமின் என்பதை சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தமது செயல்களுக்கூடாக நிறுவ வேண்டும்.
உங்களில் ஒரு சாரார் மீது உங்களுக்குள்ள பகை அவர்கள் மீது அநீதி இழைப்பதற்கு உங்களைத் தூண்டாதிருக்கட்டும். என்ற இறை கட்டளைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துமீறுபவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதாக நினைத்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யும் நிலைக்கு சென்றுவிடக்கூடாது.
ஏந்த ஒரு விடயத்தையும் உணர்வுபூர்வமாக (நஅழவழையெட) அணுகுவதை தவிர்த்து அறிவுபூர்வமாக அணுகுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும். ஓர் அறைக்குள் அமர்ந்து சமூக ஊடகங்களில் உணர்வுபூர்வமாக அல்லது அடுத்தவர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பதிவுகளை பதிவேற்றம் செய்பவர்கள் அதனால் ஏற்படும் பாதக விளைவுகளுக்கு பொறுப்புசு; சொல்ல வேண்டும். நாட்டுப்பற்றுள்ள¸ சமூகப்பற்றுள்ள ஒரு முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் தள்ளிவிடும் முயற்சியை ஒருபோதும் முன்னெடுக்கக் கூடாது.
சில போது மிகவும் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களும் தூஷண வார்த்தைகளும் தனிநபர் தாக்குதல்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. இதனைப் பார்த்து ஆவேசப்பட்டு நாமும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்வாறான தெளிந்த வழிகாட்டல்கள் எம்மைப் படைத்தவனிடம் இருந்து வந்திருந்தும் அல்குர்ஆன் ஊடாகவோ அல்லது தொழுகையின் ஊடாகவோ மன நிம்மதியை தேடுவதை விட்டு விட்டு இப்படிப் பட்ட சமூக வலைத்தளங்களில் திருப்தியையும்¸ மனநிம்மதியையும் தேடுவோர் ஏராளம்! ஏராளம்!
இதனால் கயவர்கள்¸ காமுகர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். இளம் பெண் ஒருவர் தனது மன உளைச்சலை முகநூலில் வெளியிடும் போது குறித்த பெண் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு அவளை துஷ்பிரயோகம் செய்யும் வரை அவள் அறிந்து கொள்வதில்லை. இவ்வாறு சீரழிந்தவர்கள் நமது சமூகத்திலும் ஏராளமானவர்கள் உள்ளனர். இஸ்லாம் அனுமதிக்காத உறவை சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்படுத்திக் கொள்வோர். சில வேளைகளில் திருமணம் வரைக்கும் தங்களது உறவு நீடித்தாலும் திருமணத்தின் பின் பல்வேறு ஜோடிகள் இந்த சமூக வலைத்தளங்களிலே தலாக்கை அல்லது பிரிவை பதிவு செய்வதை பார்க்கின்றோம். எதிர்ப்பால் நட்பு வட்டம் சர்வசாதாரணமாக சமூக வலைத்தளங்களில் உருவாகின்றமை குடும்ப வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமைகின்றது.
மனைவிக்கு கணவனை விட நெருங்கிய நண்பன் அல்லது நண்பர்கள் இருப்பது¸ கணவனுக்கு மனைவி அல்லாத நண்பிகள் இருப்பது என்பது கூட சாதாரண விடயமாகிவிட்டது. ஐரோப்பிய கலாசாரத்திற்கு ஒப்பான இந்நிலையானது திருமண பந்தத்தின் மூலம் ஏற்படும் இறுக்கமான உறவை இல்லாமலாக்கி சந்தேகம்¸ தீய எண்ணங்கள் வளர்த்திட காரணமாகின்றது. ஷைத்தான் தனக்கு மிகவும் உவப்பான செயலாகிய கணவன் மனைவிக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்கு சமூகவலைத்தளங்களை ஆயதமாக பயன்படுத்தி¸ சந்தேகம் மற்றும் புரளிகளை உண்டாக்கி தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டு இருக்கின்றான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
மறுமை நாளை பயந்து நமது மனோஇச்சைக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவோமாக! இறைவனை எல்லா நிலைகளிலும் அஞ்சி சமூக வலைத்தளங்களை அவனுக்கு விருப்பமான விதத்தில் மாத்திரம் பயன்படுத்துவதற்கு உறுதிபூணுவோமாக!.
கருத்துகள்
கருத்துரையிடுக