மூன்றெழுத்து அம்மாவுக்குள் மூன்றெழுத்து அன்பு அழகிய புதையலாய் புதைந்து கிடக்கிறது!
அம்மா என்றாலே வலிகள் பல அவள் தாங்கி வலிமை சேர்த்து - நல் வழியும் காட்டுபவள்!
அன்பெனும் ஊற்றை அருளெனும் கீற்றை அள்ளிப் பருகாதார் எவருமுள்ளனரோ!
இஸ்லாமிய சுவனமும் அவள் பாதத்தின் கீழ் தூயதாய் மர்மமாய் மறைந்து கிடைக்கிறது!
உடலால் உள்ளத்தால் உயிராய் அன்பைக் கலவை செய்யும் பணியில் அவளுக்கு அவளே நிகர்!
அம்மா இருப்போரே நன்கு உணர்ந்திடுவீர்! அம்மாக்களை அழகிய சிம்மாசனத்தில் தாங்கிடுவீர்!
கருத்துகள்
கருத்துரையிடுக