பேனாவின் எழுத்தில் ஆறுதலாய் பேனாக்காரி இவளிடம் இருந்து ஒரு சில.
எனக்கொரு நாள் உனக்கொரு நாள் இங்கு இல்லை. எல்லோருக்கும் என்று தான் உதயம் கொள்கின்றது ஒவ்வொரு நாளும்
நீ துணிந்து எதிர் கொள்கையில் உன் எதிர்பார்ப்பு கலையாது என்னாளும்
நேற்று இன்றாகாது. இன்று நாளையாகாது. கடந்த நாளில் இருந்து அனுபவம் எடு நாளை நீ கடக்க இருக்கும் நாளுக்கு
கடக்கும் கஷ்டத்தை இஷ்ட பட்டு ஏற்றால் கஷ்டமும் வசம் கொள்ளும் உன் மனதுக்கு
இன்பம் கடைசி வரை நிலைக்க நீ நினைக்கும் போதெல்லாம் கூட இன்பம் தன்னை விட்டு நீங்கி விடும் என்ற ஒரு துன்பம் உன் மனதில் ஊசல் கொள்ள தான் செய்கிறது உன்னை அறிந்தும் அறியாமலும்
நதிகள் பின்னோக்கிய வரலாறு இல்லை அது பள்ளம் பார்த்து பயப்பட்டதும் இல்லை அதில் விழுந்து நிற்பதும் இல்லை அதன் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும் இடையில் பாறை குறுக்கிட்டாலும் கூட
காற்றும் மழையும் கூட்டை கலைத்தெறிய மீண்டும் மீண்டும் கூடமைக்கும் பறவைக்கு இருக்கும் தைரியம் மனிதா உனக்கில்லை போலும்
ஏன் எனில் தோழ்வி கண்டு துவங்கி போய் எழவில்லை இன்னும் நீ
வாழ முடியாது என கயிறு கட்டி தூக்கில் மாயும் முட்டாளும் உண்டு. உயிர் வாழ கயிற்றின் மேல் நடந்து உழைக்கும் தன்னம்பிக்கையாளனும் உண்டு..
வாழ்க்கை ஒரு போர் + ஆட்டம். அதில் போராடி பார்த்து போராடி தோற்று போராடி ஜெயிப்பவன் தான் மனிதன்
கஷ்டம் கண்டு வாழ்வை தொலைக்க வெட்டிய முடி அல்ல மீண்டும் வளர
என்னால் முடியும் என நீ நினைத்தாலே போதும் உன் வாழ்க்கையின் வெற்றிக்கு படிகள் உன் கண் முன் தோன்றும்
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஆறு வாரங்களில் அன்னார்ந்து பார்க்கவைக்கும் சீன மூங்கிலை போல் நீ இரு
உனக்கும் ஒரு விதி இருக்கு அதன் கதவும் பலமாய் இருக்கு அதற்கான சாவி பல இருக்கையில் அதை சரியாக துறக்கும் சக்தி உன் தன்னம்பிக்கையும் உனக்குள் இருக்கு
கருத்துகள்
கருத்துரையிடுக