என்ன பதில் தருவாய் என்னவளே!

விழிகள் வரைந்து வைத்த ஓவியம் ஒன்று என் வழி வந்து போனது இன்று!

நான் தவம் இருந்தும் கிடைக்காத வரம் ஒன்று அவள் என்னுள் வந்து போன நினைவுகள் என்பதை எப்போது புறிவாளோ!

நான் அழுது புலம்பி பல காலமாயிற்று என் காதலியின் பாதம் என்னைத் தீண்டி போனதால் அன்று!

எனக்கு வலிகள் கிடையாது வழிகளும் கிடையாது விழிகளில் இருப்பவளை வியப்பில் மூழ்க வைத்துப் பார்க்க!

நீ என்னுள் விதைத்துப் போன உணர்வுகளுக்குத் தெரியும் நான் உன்னை எவ்வளவு நேசிக்கின்றேன் என்று இன்றுவரை!

நீ என் காதலை புறிந்து கொள்ளும் காலம் எப்போது வரக்கூடும்! நான் இப்போது நொருங்கிப் போய் உள்ளோன் நான் அடங்கி கிடக்கும் கல்லறையில் இருந்து!

என்ன பதில் தருவாய் என்னுள் புதைந்து கிடக்கும் நினைவுகளாவது ஆருதலாய் இருக்க!

பொத்துவில் அஜ்மல்கான் வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்