மேம்பாலத்தின் வாசலிலேயே! தோப்புகளின் எழிலிலே! தோப்பூர் நகரின் மணம் வீசும் மதிப்புடனே! மேற்தலை நிமிர்ந்து நிற்குது - எம் ஊராம் அல்லைநகர்
எங்கும் இயற்கை வளங்களும் எப்போதும் கண்களை கவரும் நெற்பயிர்களும் எந்நேரமும் எழில் பொருந்திய அழகிய குளங்களும் என்றும் நிறைந்த ஈமானிய இதயங்களும் கொண்ட - எம் ஊராம் அல்லைநகர்
மும்மொழியும் ஒற்றுமையுடனே! ஒரு தாய் பிள்ளையாய்! ஒன்றிணைந்து வாழும் - ஊராம் மாண்புமிகு நகர் அல்லைநகர்
ஆயிரம் ஆயிரம் ஆலிம்கள் பலநூறு ஆசான்கள் அடுக்கடுக்காய் கல்விமான்களை முத்து முத்தாய் பெற்றெடுத்த தூய பூமாதா - எம் அல்லைநகர்
எம்மை வளர்ந்து அரவணைத்து வரும் ஓர் அன்னை- அவள் என்றும் வாழ்க வளமுடன் வளமாய்!!!
H.M. Faais (Thoppur) Faculty Of Islamic Studies and Arabic Language South Eastern University- Oluvil வியூகம் வெளியீட்டு மையம்
கருத்துகள்
கருத்துரையிடுக