என் மருதாணி

என் மருதாணியில் ஒளிந்த சிவப்புநிறமவன்!!

கோபத்தில் சிவந்துபோகுமவன் கண்களை பார்த்தால் அதை நீங்களுமுணரலாம்!!

ஆனால் அதன் முடிவில் அவன் தருமந்த ஒற்றை முத்தம் அணுக்களில் உறைந்துபோன இரத்தவோட்டத்தை ஈரமாக்கும்!!

உலகின் ஒட்டுமொத்த காதலையும் ஒற்றை முத்தத்தில் குவித்திருப்பான் அத்தனை அழகானது அவன் காதல்!!

சிவப்பு எனக்கு பிடித்த நிறமல்ல ஆனாலும் பிடித்திருக்கிறது அவன் கோபம் சொல்லும் நிறமல்லவா அது ஒரு முத்தத்தையல்லவா பரிசளிக்கிறது!!

இது போதுமெனக்கு!! அவன் போதுமெனக்கு!!

சப்னா செய்ன் வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்