ஒரு பரதேசியின் உரையாடல்.

ஒரு பள்ளத்தாக்கு நோக்கிப் பிரயாணித்திக் கொண்டிருக்கிறோன் ஒவ்வொரு காலடியைத் தாண்டிச் செல்லும் போதும் என்னையும் கடந்து போகிறேன் போகும் வழிகளின் விழி திறந்து பார்க்கிறது.

ஒவ்வொரு உற்றுப் பார்த்தலிலும் எனது ஆடைகள் ஒவ்வொரு துண்டங்களாக  கிழிந்து கொள்கிறது அவ்வளவு பெரிய முள்ளுப் பார்வை உடலையும் வறாண்டிக் கொண்டுதான் தாண்டிச் சொல்கிறது,....

எனது உடலின் வலிமையை எனது எண்ணம் எழுதியது படித்துக் கொண்டே போகின்றேன். ஆடைகள் என்னிலிருந்து கிழிந்து துண்டங்களாக பாதை கொண்ட போதும்....நான் போகிறேன்

யாரோ....... அடர்ந்த தாடியுடன் பிரண்டு மிரண்ட சிவப்பு கண்களுடையான் கட்டியனைத்து முத்தமிட்டு வாழ்த்துப் பாடிக் கொண்டு வாழ்க்கையைப் பேசிக் கொண்டே எனதில் மீதமாக இருந்த அரைஞாண் கையிற்றையும் இறுகப் பிடித்து அறுத்துக் கொள்ள முயற்சிக்கின்றான்... தப்பிக்க செய்த முயற்சியால் விடைபெற்றான்

உரத்துக் கூறுகிறேன் முகச்சவரம் செய்யாத முழு அழகா நானோ போகும் வழி அடர்ந்த காடும் ஒடுங்கியதுமான வழி நான் கடக்கும் ஒவ்வொரு காலடிக்கும் பல்லாயிரமான விச ஜன்துகளைக் கடந்தே போகிறேன்

எனது கால்களை ஏதும் தீண்டின் விசமுன்னேறாது முடிச்சுப் போடவாவது எனது அரைஞாண் கயிற்றையாவது விட்டு.... விட்டுவை வையென்றே அவன் விறைத்துப் போகும் வரை உரைத்தேன்.

கைகளை நீட்டினான், என்னிடம் எதுவுமில்லை நீ எதைக் கேட்கிறாய் என்றேன். முகம் மலரச் சிரித்தான் புரியவில்லை புரியவில்லை புரியும் படி வேண்டினேன் ஏதோ ஒன்றை காட்டினான்.... விம்பி அழுதான்.....

அழுதான் அழுது தீர்த்தான் அவனோ அவனைப் பொருந்திக் கொள்ளும்படி பரிந்து கொண்டான்..... மீண்டும் நான் புரியாது தடுமாற்றம் என்னை சிறை கொண்டது.

உறவுகளை மீட்டுக் கொள் என்றான் மீதி நேரம் அவன் நிலைக்கவில்லை இயற்கையை இனைத்துக் கொண்டான். பரதேசியின் உரையாடலை பக்குவப்படுத்தியே..

நழீம் ஏ சுல்தான்.
வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்