அன்று உன் தந்தை அடித்த அடிகூட எனக்கு வலிக்கவில்லை இன்று நீ என்னை எந்த விடயத்திலும் அதிகமாக மட்டம் தட்டுகின்றாய் என்பதை நினனைத்தால் வலியில் துடிக்கின்றேன்
ஆழ்ந்த வேதனையில் என்னையே நான் மறந்து போகிறேன் ஆனால் ஆறுதல் சொல்ல நீ இல்லை
நான் செய்திடும் பணி அல்லாத நேரத்தை அழுகையிலும் கவலையிலும் உன் பெயரை உச்சரிக்கின்றேன் ஆனால் ஆறுதல் சொல்ல நீ இல்லை
உன்னிடம் பேசுவதற்கு ஆசையாய் வருகின்றேன் ஆனால் நீ உன் பாதத்தில் அணியும் காலனியால் அடிப்பேனேன்று துரத்துகின்றாய்
உன்னை தேடிவரும் நேரமல்லாம் என் அன்பை உணர்வாயென பார்க்கின்றேன் ஆனால் நீயோ! மறுக்கின்றாய்
உன்னை என் மிதி வண்டியில் ஏற்றியவாறு செல்லும்போது உன் தொடைப்பகுதியின் வலியை தாங்கிக்கொள்ள சக்தியின்றி என்னிடம் சொல்ல வெக்கப்பட்டவளாக நெளிந்து நெளிந்து இருப்பாய் இதை உணர்ந்து கொண்டு நான் அழுதவனாக உன்னை உன் வீட்டிற்கு விரைவாகவும் நீ உன் வலி உணராமல் இருக்க சிரிப்பூட்டியவனாகவும் கொண்டு செல்வேன் இதை நீ அறிந்திருக்க மாட்டாய்
இப்போது என்னை வேண்டாமென துரத்துகிறாய் இதனால் நீயும் பாதிப்புள்ளாகின்றாய் நானும் பாதிப்புள்ளாகின்றேன் கொஞ்சம் யோசித்துப்பார்!
என்னிடம் இருந்த அந்த நாட்களை அது கூறும் உனக்கு மோட்டார் வாகனம் ஓட்டிப்பழக்கியதையும் நாம் குடும்பத்தோடு ரிங்கோ சென்ற சந்தோஷங்களையும் ஒளுவில் சாப்பாட்டு நாட்களையும் நீ எதிர் பாராத நிலையில் உன் சந்தோஷங்களை நிறைவேற்றிய நாட்களையும் நம் வாழ்வில் நடந்த சண்டைகளை மறந்து சந்தோஷங்களை மட்டும் நினைத்துப்பார் என் உண்மையான அன்பு புரியும்.
இப்போது என்னில் இருக்கும் கோபத்தினால் என்னை வெறுக்கின்றாய் சற்று கண்களை மூடியவாறு சிந்தித்துப்பார் என்னை வெறுக்க மனம் வறாது..
கருத்துகள்
கருத்துரையிடுக