காத்திருப்பு பூத்திருப்பு!!

இரவு பகலாய் இதமாய் சுவர்களும் சிரிக்கின்றன! ஆடு மாடுகளும் மேய்கின்றன சுவரில் ஒட்டப்பட்ட தாள்களை!!

ஆம் இது தேர்தல் காலம்! எங்கும் எதிலும் போட்டி நீயா நானா எனும் பேட்டி

காற்று வீசுவது போல் மனித மனங்களும் மாறி மாறி வீசுகிறது!

காத்திருக்கிறது கதிரை! ஓட இருக்கிறது குதிரை! யாரையாவது வரவேற்க காது குளிர மனது குளிர

யார் எவர் ஆட்சியில் !! யார் எவர் வந்தாலும் அன்றாடம் உழைத்தால் தான் அவனவன் வயிறு நிறையும்!

கதிரையில் அமருமட்டும் கட்டிக் கரும்பு வாக்குறுதிகள்! கதிரையில் அமர்ந்த பின்போ குதிரை ஓடி விட யாரை நோவது!

இன்னும் இதே பல்லவி பல ஆண்டுகள் காத்திருப்பு! சில ஆண்டுகள் பூத்திருப்பு!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS II பஸ்யால

கருத்துகள்