காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 43

ஹோட்டலில் இருந்து விலகி நீண்டநேரம் இருவரும் எதுவும் பேசாமலேயே அங்கிருந்து நடந்து கொண்டிருந்தனர். திடீரென ராபர்ட்டின் ஃபோன் அலறியதும் அந்த அமைதி கலைந்தது. யாரென்று பார்த்தால் அது மித்ரத். அவன் கையில் இருந்த ஃபோனில் மித்ரத் பெயரை பார்த்ததில் வெகுவாக ஆக்ரோஷப்பட்ட டிடானியா அவன் அழைப்பினை ஏற்க முன்னரே அதை பறித்து வீசிவிட்டாள்.

"சதக்..." ஃபோன் வெவ்வேறு பாகங்களாக சிதறின. திடீரென ஃபோன் கட் ஆனதும் மித்ரத்துக்கும் ஒன்றும் புரியவில்லை.

"ஹேய் என்னோட ஃபோன்...." என்று அவற்றை பார்த்து வருந்தினான் ராபர்ட்...

"இப்போ எதுக்காக என்னோட ஃபோனை உடைச்சே...." என்று கேட்டுக்கொண்டே அவற்றின் சிதறல்களில் இருந்து சிம்மினை பொறுக்கி எடுத்தான் ராபர்ட். அவளோ அதற்கும் ஒன்றும் பேசவில்லை.

"இருந்தாலும் உனக்கு கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி.... டிடானியா... வீட்டுக்கு வா உனக்கு இருக்கு கச்சேரி...." என்று லேசாக முணுமுணுத்து கொண்டான்.

வீட்டுக்கு போகவேண்டும் என்று நினைத்த போதுதான் இன்னொரு விடயமும் நியாபகத்திற்கு வந்தது.

"இவளை இதே ட்ரெஸ்ஸில் இப்படியே வீட்டுக்கு அழைத்து சென்றால் என்ன ஆகும்??? உடனே ஒரு வழியை யோசிக்க வேண்டும். என்ன பண்ணலாம்..."

என யோசித்து கொண்டிருக்கும் போதே பின்னாடி மோட்டார்வண்டி முறுக்கும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் அது. விக்டர்

"ஒஹ்ஹ். விக்டர்.. தேங் காட்... உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லியே. அங்க நிலவரம் என்ன?" என்று டிடானியா அருகே ராபர்ட் இருப்பதையும் மறந்து கேட்டாள்.

"யாஹ்... எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா பொலில் எல்லோரையும் விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க நான் எப்படியோ அங்கிருந்து வந்துட்டேன்." என்றவன் ராபர்ட்டை பார்த்து

"இவளை அங்கிருந்து பத்திரமா கூட்டிகிட்டு வந்ததற்கு தாங்ஸ். மிஸ்டர்... மிஸ்டர்...."

"ராபர்ட்."

"தாங்ஸ் ராபர்ட்... இவளை நானே வீட்டுல விட்டுர்றேன். நீங்க இப்போ அங்க போறது தான் உங்களுக்கு நல்லது...." என்றான்...

"என்ன எங்கிருந்தோ வந்து, என்னன்னவோ ஒளர்ர...யார் நீ மொதல்ல...?"என ராபர்ட் அதட்டி கேட்டான். கேட்டான்.

"கூல் ப்ரோ. கூல்.. எல்லாம் தெரியதானே போகுது.. இப்போ நீங்க போங்க..." என்று ராபர்ட் கிட்ட விக்டர் சொல்ல டிடானியாவும்  அவன் பக்கம் நிற்பதாக தெரிய ராபர்ட் அவர்கள் சொன்னது போலவே ஹோட்டல் பக்கமாக சென்றான்.

*******************

ஹோட்டலில் ராபர்ட்டை கண்டதும் மித்ரத் அவனை நெருங்கி...

"இவ்வளவு நடந்து இருக்கு எங்க போய் தொலைஞ்ச நீ... உனக்கு. ஃபோன்  பண்ணினா ஆன்ஸ்வர் பண்ண மாட்டியா?" என்று கேட்டான். அவனுக்கு சிம்மினை காட்டிய ராபர்ட்

"சாரி சேர். என்னோட ஃபோன் உடைஞ்சி போயிடுச்சு... அதான்......"

என்று சமாளித்து விட்டான்..

****************

இரவானது.

ராபர்ட் வீட்டுக்கு சென்ற போது அங்கே சொன்னது போலவே விக்டர் டிடானியாவை வீட்டில் சேர்த்து இருந்தான். ஏன் அவனும் அங்குதான் இருந்தான். அங்கிருந்த லூதர் அங்கிள் எதுவும் அறியாமல்  விக்டரை ராபர்ட்க்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தான் நமது ஜெனி, மீரா, ஆர்தர், கில்கமேஷ் எல்லோருமே. மிகவும் களைப்புடன்  வீட்டுக்கு வந்தனர்.

"ஆஹ். வாங்க வாங்க... வர வர உங்களை பார்த்தா ப்ரொஜெக்ட் செய்யுற பசங்க போலவே தெரியல ஏதோ பெக்டரிக்கு போய் வேலை செஞ்சிட்டு வர்றவங்க போல இருக்கு ஹாஹாஹா" என்று சிரித்து கொண்டே சொல்ல அவர் சொன்னதை கேட்டு ஒருகணம் அதிர்ச்சியில் வந்தவர்கள் அப்படியே நிற்க அவர் சிரித்ததும் தான் அது ஜோக் என்று புரிந்தது.

"ஜெனி... இது என் மனைவியோட அண்ணன் பையன் விக்டர்..., விக்டர்! இது என்னோட பிரென்ட் பொண்ணு ஜெனி... இவங்க எல்லாம் ஒரு ப்ரொஜெக்ட் விஷயமா இங்க வந்திருக்காங்க" என்று மறுபடியும் அறிமுகம் செய்து  வைத்தார்.

விக்டரை கண்டதும் மீராவுக்கு அன்றைய நாள் டிடானியா கூட கண்ட பையன் இவனே தான் என்று புரிந்ததும் அதை ஜெனிக்கு  சொல்ல முயற்சித்தாள். இதனை ஏற்கனவே கண்டுபிடித்திருந்த ஜெனி.

"சரி அங்கிள். நாங்க எல்லோரும் கொஞ்சம் பிரஸ் அப் பண்ணிக்கிட்டு வர்றோம்." என்று விட்டு மீராவையும் இழுத்து கொண்டு மேலே சென்றாள். அவர்களை பின்தொடர்ந்தே கேகேவும், ஆர்தரும் சென்றனர்.

"சரிம்மா. நீங்க பேசிட்டே இருங்க நான் வரேன்" என்றுவிட்டு லூதரும் அவர் அறைக்கு போய் விட்டார்.

அப்போது ராபர்ட் இவர்களை பார்த்து "ரெண்டு பேரும் என்கூட மேலே வாங்க.." என்று அழைத்து கொண்டு சென்றான்.

டிடானியாவும் விக்டரும் ஆளுக்காள் முகத்தை பார்த்து விட்டு ஏகமனதாக அவன் சொன்னபடி அவனை பின்தொடர்ந்து மேலே சென்றனர்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்