"ஐயோ என்ன இது. கில்கமேஷ்... காம் டவுன்... அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதே... அவனை பற்றி தான் நமக்கெல்லாம் தெரியுமே... கொஞ்சம் பொறுமையா இரு சொன்னா கேளுடா...." என்று கூறி கில்கமேஷை அடக்கினான் ஆர்தர்.
"என்னடி இப்படி பொசுக்குன்னு சுட்டுட்டான். அவர்களுக்கே அந்த கதி என்றால். நாம இங்க இருக்கிறது தெரிஞ்சா" மீரா பேசியது ஜெனிக்கு பயத்தை உண்டுபண்ணியது.
"கூடாது... நாம இங்க இருக்கிறதோ, இல்ல அவனுங்க இருக்கிறதோ. மித்ரத்திற்கு கடைசி வரை தெரியவே கூடாது.." என்றாள் ஜெனி.
"இங்க நடந்ததை பார்த்தீங்க இல்ல... யாராச்சும் எங்களுக்கு எதிரா ஒரு அடி எடுத்து வெச்சாலும் அவங்கள இங்கேயே கொண்ணு புதைச்சிடுவேன்." என்றான்.
"நாங்க உள்ளே போகப்போறோம்... என்னோட ஆளுங்க எல்லோரும் இங்கதான் இருப்பாங்க. உங்க எல்லோரையும் கண்காணிச்சுகிட்டு என்கூட வர்றதுக்கு ரெண்டு கூலி ஆளுங்க அதோட ஒரு ஆர்க்கியொலிஸ்ட் வேணும் யாரு வரப்போறது என்று சீக்கிரமா முடிவு பண்ணுங்க அதுக்குள்ள இந்த கதவை திறங்க." என்று அவனுடைய ஆட்களுக்கு அவன் கட்டளையிட்டான்.
முதலில் கடப்பாரை கொண்டு பூட்டை எப்படியோ உடைத்துவிட்டனர். அடுத்து கதவை திறக்க முயற்சி செய்தனர். அவர்கள் ஒவ்வொருவராக தம் ஒட்டுமொத்த பலத்தினையும் கூட்டி அந்த கதவை திறக்க முயற்சி செய்தார்கள். ஆனால் கிரீச் கிரீச் என்ற சத்தத்தை தவிர வேறு எதையும் அசைக்க கூட முடியாமல் அந்த கதவு அவ்வளவு இறுக்கமாக இருந்தது.
"இன்னும் கொஞ்ச பேர் வாங்க." என்று அழைக்க யோசிக்காமல் கில்கமேஷ் அவன் தலையில் வெயிலுக்காக கட்டி இருந்த துண்டை எடுத்து முகத்தில் முக்கோணமாக மடித்து மாஸ்க் போல கட்டிக்கொண்டான்.
"எங்க போறே... அங்கெல்லாம் போகாதே. கில்கமேஷ்... அவங்க உன்னை பார்த்துட்டா... அவங்க உன்னை பார்த்துடுவாங்க....." என்றவன் அப்படியே நிறுத்தி கொண்டான்.
"ஆமால்லே... நீதான் கில்கமேஷ் என்று அவனுங்களுக்கு தான் தெரியாதே..." என்று சிரித்து கொண்டே சொல்ல
"தெரியாதுல்ல. இப்போ பாரு நான் யாருன்னு அவங்களுக்கு காட்டுறேன்." என்று புறப்பட்டான்.
வேறுபக்கமாக நின்று கொண்டிருந்த ஜெனி இதை பார்த்து விட்டு
"என்ன... அது கில்கமேஷ். ஹேய்.. அவன் எங்கடி போறான்.. சே... இவனுக்கு இதுவே வேலையா போயிடுச்சு.."
அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவனும் தள்ள கதவு திறக்கும் சத்தம் எல்லோரின் காதுகளையும் பிளந்தது.
"இருந்தாலும் நீ ரொம்ப பலசாலிதான். நீ எங்களுக்கு உபயோகப்படுவே. உள்ளேவர தயாரா??" என்று கேட்டான் மித்ரத்.
"வருவேன் சேர். ஆனா எனக்கு தகுந்த சன்மானம் தரணும்." என்றான் கில்கமேஷ்.
அவனுடைய தைரியம் மித்ரத்தை ஈர்த்தது. "இவ்வளவு தைரியமா உனக்கு.. ஐ லைக் இட்... நீ உள்ளே எங்க கூட வா.. இப்படி நிறைய கதவுகளில் உன் கைவரிசையை காட்ட வேண்டி இருக்கும்.. கடைசில உனக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும்... என்னை நம்பு.." என்றான்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ராபர்டுக்கு கண்கள் எல்லாம் மேலே சொருகி கொண்டது.
"என்னாங்கடா இது. நாமதான் நடிகன் என்னு பார்த்தா. இவன் உலகமகா நடிகனா இருக்கானே."
அப்படியே இந்த ஆர்தரும் முகத்திலே துணியை கட்டிக்கொண்டு கில்கமேஷ் பக்கத்தில் வந்து நின்றான்.
"ஐயோ. ஆர்தர்!!!" என மீரா பதறினாள்.
"நீ. யாரு..?"என்று மித்ரத் கேட்டான்.
"இன்னோரு ஆளு வேணும்... என்று சொன்னீங்க சார்..."
"ஆஹ். சேர்.. இவன் என்னோட நண்பன் தான்.. நல்லா வேலை செய்வான்.." என்று கில்கமேஷின் சிபாரிசு வேறு.
"சரி... என்ன டிசைட் பண்ணிடீங்களா... எங்க கூட வரப்போற ஆர்க்கியொலிஸ்ட் யாரு.... ஒரு வேளை நானே ச்சூஸ் பண்ணட்டுமா என்று கேட்டான்."
"இப்போ என்ன பண்ணுறது... நம்மள்ள யாராவது போனா தான்... சரி.... நானே போறேன்...... நீ நீ இங்கேயே.. இரு நாம போட்டிருக்கிற ஹெல்மட் மூலமா நான் யாருன்னு இப்போதைக்கு அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை..." என்றவள் மீரா சொல்ல சொல்ல கேட்காமல் எழுந்து போய் நின்றாள்.
"நான் வர்றேன்..."
"ஜெனி... ஜெனி." என்று கில்கமேஷ் பதற்றப்பட...
"ஓகே. இனி என்ன.. வாங்க டீம் ரெடி.." என்றவன் அவனுடைய ஆட்களில் நால்வரையும் காவலுக்கு வைத்து விட்டு அவனும், அவனுடைய ஆள் ஒருவனும் ராபர்டும், ஜெனி, ஆர்தர் மற்றும் மீரா... எல்லோரும் தத்தம் அடையாளங்களை மறைத்தவாறே அவனுடன் உள்ளே செல்ல தயாராகினர். உள்ளே காலெடுத்து வைக்க முன்னர் திடீரென மித்ரத்திற்கு சந்தேகம் வந்துவிட்டது.
"கொஞ்சம் நில்லுங்க... ஏன் ரெண்டுபேரும் முகத்தை மூடிக்கிட்டு இருக்கீங்க" என்று கேட்டான்.
"ஆஹா. இவன் மாஸ்கை கழற்ற சொல்லப்போறான் போல இருக்கே.." என்று ராபர்டுக்கு வியர்த்து கொட்டியது.
"அது இங்க ரொம்ப மணலா இருந்திச்சே. உள்ளே வேற தூசி இருக்கும்... அதுதான்..." என்றான் கில்கமேஷ்.
கில்கமேஷ் முகமூடியை மித்ரத்தின் ஆள் வந்து கழற்றிவிட்டான். நல்லவேளையாக அவனுக்கு கில்கமேஷ் இவன் என்று தெரியவில்லை. அடுத்து ஆர்த்தரை நெருங்கி கையை மாஸ்க் கிட்ட கொண்டு போனபின்னர் மித்ரத்துக்கு ஒரு ஃபோன் கால் வந்துவிட.. மித்ரத் பேசினான்.
"ஒஹ்ஹ் என்ன... அப்படியா... நான் உடனே வந்துர்றேன்." என்று தொலைபேசியில் பேசிக்கொண்டான்.
"அவசரமாக நான் போயாகனும். நீங்க எல்லோரும் போங்க. அப்பறமா வந்து ஜோய்ன் பண்ணிக்கிறேன். ராபர்ட்..! என்கூட வா..." என்று அவனையும் அழைத்து கொண்டு. மித்ரத் புறப்பட்டான்.
"சரி சரி. வாங்க..." என்று அவர்களை அப்படியே உள்ளார அழைத்து சென்றனர் கழுகு உருவ பச்சை குத்தியிருந்த அந்த லோகேஷ்.
கருத்துகள்
கருத்துரையிடுக