காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 58

"இங்க எதுக்காக கூட்டிட்டு போய் இருக்கான்... என்னதான் பண்ணப்போறான்?" என்று  யோசிக்க, அவன் தோளில் தட்டிய மீரா.

"அவங்க பின்னாடியே போவோம் வா " என்று கூறி வண்டியை விட்டு வெளியே வந்தாள்.

அவர்கள் மயக்கத்தில் இருந்த ஜெனி, கில்கமேஷையும், கட்டிய நிலையில் இருந்த ராபர்ட்டையும், அத்தோட என்கிடு உடலையும் ஆய்வு கூடத்துக்குள் கொண்டு சென்றனர். அவர்கள் உள்ளே போகும் போது ராபர்ட் இவர்கள் மறைவிடத்தில் நிற்பதை கண்டுவிட்டான். நல்லவேளை வேறு யாரும் பார்த்துவிடவில்லை.

"இப்போ எப்படி அவங்கள காப்பாத்த போறோம்?" என்று கேட்டாள் டிடானியா.

"கண்டிப்பாக அவங்கள நாம காப்பாத்தியே ஆகணும். கொஞ்சம் யோசிப்போம். அதுக்கு ஒரு வழி இல்லாமலா போய்டும்?"என்றான் விக்டர்.

************

15 நிமிடங்கள் கழித்து அந்த ஆய்வு கூடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு இருந்த சிறை போன்ற ஒரு அறையில் மூவரும் கிடந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக ஜெனியும்  கில்கமேஷும் மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு மீண்டனர். ராபர்ட் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டு ஒரு மூலையில் சாய்ந்து கொண்டிருந்தான்.

"என்னாச்சு.. நாம இப்போ எங்க இருக்கோம்?"என்று கேள்வி கேட்டாள் ஜெனி.

"இது ஒரு லெபோரட்டரி இங்க எதுக்கு நம்மள கொண்டு வந்து அடைச்சி வெச்சிருக்கான்னு புரியல" என்ற ராபட் கில்கமேஷ் கிட்ட

"தப்பான முடிவு எடுக்காதே, இவங்கள நம்பாதே என்னு அப்பவே சொன்னேனே கேகே... ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தே?"என்று கேட்டான்.

"உனக்கு புரியல ராபர்ட் அந்த நேரம் நான் மட்டும் அப்படி முடிவு எடுக்காமல் அவனோட மோத போய் இருந்தா இன்னேரம் அவங்க உன்னையும் ஜெனியையும் கொன்னு இருப்பாங்க. நான் ஒரூ முறை இழந்த இழப்பே என்னால இன்னும் தாங்கிக்கொள்ள முடியல்ல. உங்களுக்கு ஒண்ணு என்னா நிச்சயமாக என்னால அதை பார்த்துகிட்டு இருக்க முடியாது.  அதோட, எப்படியும் நாம செய்யப்போற அதே வேலையை அதாவது என்கிடுவுக்கு உயிர்கொடுக்குற வேலையை அவனே செய்ய போறான். இப்போதைக்கு நம்ம கிட்ட மோதிரமும் இல்லையே. அதான் அவனே பண்ணட்டும். என்னோட என்கிடு உயிரோட வந்ததும் அவனுக்கு இருக்கு." என்றான் உணர்ச்சி பூர்வமாக.

"அது சரி.... நாங்க உன்னோட பீலின்ங்ஸை புரிஞ்சிக்கிட்டோம். ஆனா அதனால பாரு இப்போ நீ இவ்வளவு வருசமா காத்துகிட்டு இருந்து எவ்வளவு சிரமங்களை தாண்டி கண்டுபிடிச்ச  என்கிடு உடல் இப்போ அவங்க கைகளுக்கு போய்டுச்சே" என்றாள் ஜெனி.

அப்போது தான் ஆர்தர் மயக்கத்தில் இருந்து எழுந்து கொண்டான்...

"காய்ஸ்... நாம... இப்போ எங்க இருக்கோம்?"

"ஆய்வு கூடத்தில்...." என்று ராபர்ட் சொல்ல... அவனை பார்த்து...

"என்னது ஆய்வு கூடமா ஒருவேளை நம்மை இந்த எலி பூனையை வெச்சு ஆராய்ச்சி பண்ணி பார்ப்பாங்களே அப்படி ஏதும் பண்ணபோறாங்களா?" என்று பயத்தில் உளறினான்.

"நான் நினைக்கிறேன். என்கிடு உடலை வெச்சி ஏதோ ஜெனெக்டிக் ரிசேர்ச் பண்ணபோறதா டிடானியா சொன்னாளே அதைத்தான் பண்ணபோறானா?" என ஜெனி கேள்வி எழுப்பினாள்.

"ஓஹ். இப்போதான் எனக்கு எல்லாமே புரியுது. என்கிடுவுக்கு உயிர் கொடுத்து அவன் மறுபடி வந்ததும் அவன் உடம்பில் இருந்து செல்ஸ் எடுத்து இவனுங்க வேண்டிய உடல் பலத்தை அடையனும் என்னு நினைக்கிறாங்க அப்படி மட்டும் பண்ணிட்டா இனி இந்த மொத்த உலகமே அவங்க காலடியில் வந்துடும் இல்லையா????

இதுக்காக தான் என்னோட அப்பா அம்மாவை வெளிநாட்டில் இருந்து வரவெச்சு இருக்கானா?" என்று ராபர்ட் கூற மூவரும் அவனை ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர்.

"என்னது... உன்னோட அப்பா அம்மாவா?" என்று ஜெனி கேட்டாள்.

"என்ன சொல்ற நீ...?" என்று கில்கமேஷும் கேட்க. ராபர்ட் சிரித்தான்.

"கவலை படாதீங்க காய்ஸ் இந்த எக்ஸ்பிரிமண்ட் நடக்க போறதில்லை" என்றான் அவ்வளவு உறுதியாக.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்