"இப்போ என்ன ஆச்சு...?" என கில்கமேஷ் கேட்டான்..
"நம்ம விசா பீரியட் முடிவதற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு... அதுக்குள்ள எப்படி." என ஜெனி யோசித்தாள்.
"அட ஆமா, நாம டூரிஸ்ட் விசாவில் தானே வந்தோம் ." ஆர்தர் சொன்னான்.
"இப்போ என்ன பண்ணுறது?"என மீரா கேட்க,
"எனக்கு சின்னதா ஒரு யோசனை தோணுது காய்ஸ்!" என்றான் ராபர்ட்.
"என்னது சொல்லேன்." என விக்டர் கேட்டான்.
"அதுவந்து... நானும் என்னோட அம்மா அப்பாவும் இத்தாலி போறோம். அம்மா உங்க துறையில் இருக்குற ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் உங்களுக்கு கண்டக்ட் பண்ண முடியும் தானே!" என்று ஹேமா கிட்ட ராபர்ட் கேட்டான்.
"ஆமா...முடியும்."
அப்போ நல்லது... நாங்க எல்லோருக்கும் மித்ரத்தை பற்றி சொல்லி இந்த ஆராய்ச்சியை பண்ண வேணாம் என்னு எக்ஸ்பிளைன் பண்ணுவோம். கண்டிப்பாக அவங்க நாம சொல்றதை கேப்பாங்க.
என்றான்
"ஹா..கிரேட்... அப்படின்னா. மீரா ஆர்தர் நீங்களும் அவங்க கூட போய்டுங்க." என்றான் கில்கமேஷ்
''என்ன... என்ன சொல்றே.. அப்போ நீயும் ஜெனியும்..." என்று மீரா கேட்டாள்.
"உங்களை இங்க தனியா விட்டுட்டு எப்படி எங்களால மட்டும் போக முடியும்..?"ஆர்தர் சொன்னான்.
"பிளீஸ், நிலைமையை புரிஞ்சி கொள்ளுங்க.... நாம எல்லாருமே இங்க இருக்க முடியாது. இப்போதைக்கு எங்க கூட இவங்க இருக்காங்க... கில்கமேஷ் இருக்கும் போது எனக்கென்ன கவலை."
"இருந்தாலும்..."
"அவ சொல்றது சரி மீரா... நீங்க போறது தான் இப்போதைக்கி நல்லது. நாங்க அவங்கள பார்த்துகிறோம்... "என்றான் விக்டர்.
"விசா பீரியட் முடிஞ்சா இவங்களுக்கும் பிரச்சினை வருமே..."என்று மீரா கேட்டாள்.
"அதெல்லாம் நாங்க பார்த்துகிறோம். நீங்க ஒண்ணு மட்டும் பண்ணினா போதும். போகும் போது எயர்போர்ட் ஸ்டேஷன்ல ஒரு கம்பலைன் பண்ணிட்டு போங்க." என்றான் விக்டர்..
"என்னன்னு...?"
*************
மறுநாள்.... விமான நிலையத்தில்....
"ஆமா சேர் இவங்க ரெண்டுபேரும் மிஸ்ஸிங்..." என்று மீரா அங்கிருக்கும் ஆபீசருடன் பேசி கொண்டிருந்தாள்.
அவரும் வேண்டிய தகவல்களை எல்லாம் விசாரித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்தார்.
"எங்க பிரெண்ட்ஸ் கிடைச்சிடுவாங்களா சேர்,"
"கண்டிப்பாக... நாங்க அவங்க எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி உங்க நாட்டுக்கு அனுப்பி வைப்போம். நீங்க பதற்றப்படாம நாட்டுக்கு போங்க." என்று அனுப்பி வைத்தார்.
விக்டரும் டிடானியாவும் ராபர்ட் அப்பா அம்மா ,ராபர்ட் ,மீரா ஆர்த்தரை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். ராபர்ட்டுக்கு தன் காதலை டிடானியா கிட்ட சொல்லாமலேயே போவது போல உணர்ந்தான். அவளும் உள்ளார வருத்தப்பட்டாள்.
"அப்பறம் நான் வர்றேன்.. "என்றான் ராபர்ட்.
"நல்ல படியாக போய்ட்டு வாங்க.. மறக்காம மெசேஜ் பண்ணுங்க .." என்றவள் அவனே எதிர்பார்க்கவில்லை அவனை கட்டி அணைத்து அழுதுவிட்டாள்.
"ஓஹ்.... டிடானியா.. என்... என்ன... இது?"
விக்டருக்கும் ஹேமா ஜானுக்கும் ஒன்றும் புரியவில்லை. தன்னை சுதாரித்து கொண்ட டிடானியா.. சாரி.. என்று சொல்லி விலகி கொண்டாள். அவர்களின் விமானம் புறப்பட்டதும் விக்டர் அவளை ஆறுதல் படுத்தி விமான நிலையத்துக்கு வெளியே கூட்டி வந்தான். அங்கே சற்று தொலைவில் பார்க் பண்ணி இருந்த அவர்களின் காருக்கு அருகே இருவரும் சென்றனர்.. அப்போது கார் கண்ணாடி திறந்தது.உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர். தலைமுடிக்கு நிறமடித்து பெரிய கறுப்பு கண்ணாடி அணிந்து மொத்த தோற்றமும் அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருந்த கில்கமேஷும் ஜெனியும் தான் அவர்கள்.
"அவங்க பத்திரமா போய்ட்டாங்க..."
"கூல்... கார்ல ஏறிகங்க.. அடுத்த பிளானை சொல்லுறேன்..." என்று ஜெனி சொல்ல இருவரும் சிரித்து கொண்டே பின்பக்கம் ஏறி அமர்ந்தனர். வண்டி புறப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக