தாமரை(றை)க்கோபுரம்

தாமரைக்கோபுரம் தப்ரபேனில் மின்னுது தலைப்புச் செய்தியாய் தாய் நாடு கடந்தும் பலபத்திரிகையில் தொங்குது

கச்சிதமாய் பலதும் பொருத்தி கிழக்காசியாவின் உயரமாய் நிறுத்தி கடந்து வந்த பாதைக்கு நல் கதவு இதுவென்று கைச்சின்னம் சொல்லிக் கொள்கிறது.

கடனிலே மூழ்கிய நாட்டில் கடல்கணக்கு கடன் திரும்ப  திரும்ப தேவைதானோ கல்விமான்கள் சிந்திப்பு இப்படித் திரும்புகிறது.

ஏழைக்கு ஆடம்பரம் அமைதியைக் கெடுக்குமாம் தாமரைக்கோபுரம் ஓர்நாள் தாய்நாட்டை தாக்குமாம்

நல்லது வேண்டியே நாங்கள் ஒன்றிணைவோம் கடன்தொல்லை நீங்கவே -இனியாவது கல்வியறிவுடன் செயற்படுவோம்

Binth Ameen SEUSL
தாமறை: தாமாக அறைந்து கொள்ளல்

கருத்துகள்