இதயமில்லாதவர் நடுவில் இரக்கமானவனாய் நானிருக்க நினைப்பதில்லை! என்னையும் அரக்கனாய் மாற்றி விடுவார்கள் என எண்ணி!
துழைந்து போன நாட்களை வலித்துக் கொண்டு இருக்கும் வாழ்க்கை கொண்டு சல்லடை போடும் நேரமாயிற்று இன்று!
இங்கு வயிற்றுப் பசி பார்த்து பல யுகங்கலாயிற்று! பணப் பசியில் புதைந்து போனதால் இன்று!
அழகிய குணங்கள் அழுகிப் போகின்றது நழுவிப் போன மானிடர்களால் இன்று!
என்னைய விட்டு விடுங்கள் அனைவரும் இந்த யுகத்தில் புதைந்து போய் விட்டார்கள் நான் எழுந்து கொண்டு ஓடவுள்ளோன் என்னை விட்டு விடுங்கள்!
இந்த உலகம் அழகாய்ப் பேசும் உயர்வாய் தூற்றும் ஊனமாய்ப் போன உபத்திர பண மேகத்தினால்!
நான் அரக்கனாய் இருப்பதை விட இரக்கமானவனாய் வாழ்ந்தே போகின்றேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக