நீ நேசிக்கப்படுவாய்!

நான் உண்மையை நேசிக்கிறேன் நீயும் உண்மையோடு நேசமாய் இருந்தால் என்னோடு நீயும் ஒன்றாக நேசிசிக்கப்படுவாய் நன்றாக!

நான் பொய் வார்த்தைகளை தீயிட்டுக் கொளுத்துகிறேன்! பொய்ப் பிரசங்கங்கள் பொய்ப் பிரசாரங்கள் பொய்ப் பிரசுரங்கள் யாவற்றையும் நீயும் தீயிட்டுக் கொளுத்தினால் என்னோடு நீயும் ஒன்றாக நேசிசிக்கப்படுவாய் நன்றாக!

நான் நன்மையை யாசிக்கிறேன் நீயும் நன்மையோடு நேசமாய் இருந்தால் தீமையைக் களைந்தெறிந்தால் என்னோடு நீயும் இயல்பாக நேசிக்கப்படுவாய் நன்றாக!

எழுத்துக்களுக்கு நானும் நல்ல கருத்துக்களை உயிராய் உணர்வுகளோடு சேர்க்கிறேன்! நீயும் எழுத்துக்களை அதன் கருத்துக்களை சுவாசிக்கும் சுகதேகியாய் என்றுமிருந்தால் நேசிக்கப்படுவாய் நன்றாக!

நான் உலகை எழில் செய்யும் பசுமைப் புரட்சி செய்கிறேன்! பசுமை பேணும் பக்கவாதமில்லா பக்கச் சார்புமில்லப் பண்பு உன்னிடமிருந்தால் என்னோடு நீயும் ஒன்றாக நேசிசிக்கப்படுவாய் நன்றாக!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS - II பஸ்யால

கருத்துகள்