திருமணம் என்னும் இருட்டறையில் உன்னை நம்பி என் பெற்றோர்கள் என்னைத் தள்ளிவிட்டனர்
உன் காலடியில் விழுந்த நாள் முதல் நான் கண்ட இன்பங்கள் வேறெந்த மனைவியும் கண்டதில்லை
நீ ஒவ்வொரு முறை என்னை அடிக்கும் போதும் என் கன்னத்தை முத்தமிடும் உன் நகத்தின் கீரளும்; என்னில் கசியும் இரத்தமும்.
நீ என் தலையை பிடித்து அறை சவற்றில் அடிக்கும் போதெல்லாம் உன் கைகளில் சிக்கிய என் தலை மயிலர்களும் ஓட்டை விழுந்த சிவரும்
நீ ஒவ்வொரு வார்த்தை கூறி என்னை வதைக்கும் போதும் என் விழிகளில் வடிந்த கண்ணீரும் நான் சுண்டி எறிந்த மூக்கு நீரும்
நீ ஆளும் கொடுங்கோலனாய் என்னை பார்க்கும் பார்வைகளும் நான் உன்னிடம் இருந்து தப்பிக்க பின் வைக்கும் ஒவ்வொரு அடிகளும்
இன்று நான் உன்னிடம் சொல்லி அழவில்லை என்றாலும் நாளை உனக்கு எதிராக எனக்கு சார்பாக!! சாட்சி சொல்லும் என் வலிகளின் வார்த்தைகளாக!!!! கோட்டில் சொல்லி அழப்போகிறேன்.
இங்கு என்னை ஆட்சி செய்தாய் அங்கு சென்று யாரை அடக்கி ஆளப் போகிறாள்????
என்ற இந்த மனநிலையுடன் இறுதியாக உன்னிடம் பிரசன்னமாகிறேன்...
கருத்துகள்
கருத்துரையிடுக