மறைந்திடுமா புதுவகையான குச்சி!!

என்ன செய்கிறேன் எனத் தெரியவில்லை தெரிந்து கொள்ள முன்பு என்னை அழித்துக் கொண்டேன் இன்று!

வழி தவறிப் போன குழந்தையாய் மனம் தளர்ந்து போனேன் புது யுகம் ஒன்று வந்து போனதால் இன்று!

வாய் நனைத்திட வெள்ளையாய் ஓர் குச்சி நுரையீரல் உரைந்து போக ஆவியாய் உட்புகுருகின்றது இன்று!

நான் தவறிழைக்கவில்லை எனக் கூறவில்லை நான் தவறிழைக்க காரணங்கலாய் இருந்தவர்கள் நீங்கள் எனக் கூறுகின்றேன் இன்று!

அதிசய உலகில் அத்தியவசியமாய்ப் போன இந்த புதுவகை குச்சிக்கு இந்த புனிதமான உடலும் அடிமையாய் போனது ஏனோ!

வயிற்றுப் பசியினைப் போக்க உழைத்து ஓடும் மானிடர் நடுவில் என்னை குழியில் புதைத்துக் கொள்ள எழுந்து வந்தது இந்த புகைத்தல்!

நான் ஒன்றும் உங்களை குறை கூறவில்லை என்னில் பல குறைகள் உள்ளது அவை ஒழிந்து போகதாத எனக் கதறுகின்றேன் இன்றுவரை!

வலிகள் அதிகமாய் உள்ளது வழிகள் எங்கும் வலிகளைத் தந்த போகும் வேசமிடும் மானிடர்களால்!

மறைந்திடட்டும் இந்த புதினமான குச்சி!

பொத்துவில் அஜ்மல்கான் வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்