முஹர்ரமே முழுமதி தாராய்!

வாராய் வளர்பிறையே மலர்வாய் மனம் நிறைய மலர்ந்து நிறைந்து மணப்பாய் மனங்களிலே சாந்தி சமாதானத்தை இரு கண்களாயும் ஈமானை மூளையாயும் நன்மக்களுக்கு நற்தேதியிட சன்மார்க்க நற்சேதி குறித்திட துல்ஹஜ்ஜா விடைபெற புதுத் தேதியாய் புது வருடமாய் உனை முகமலர்ந்து வரவேற்கின்றோம் நாம் முஹம்மது நபி வழித்தோன்றல் முஹர்ரமே எம் அகம் பாராய்!

முதலாவதாய் முதன்மையாய் ஆண்டொன்றுக்கு நீயும் ஆணித்தரமாய் அடித்தளமிட்டு அரவணைக்க அன்பொழுக நன்மைகளை கொள்ளை கொள்ள புதுத் திட்டங்கள் சுமந்தே புத்தாண்டை நல்லெழில் செய்தே மாந்தர் வாழ்வினை விழிப்பூட்டி சிறார்கள் உள்ளங்களை களிப்பூட்டி அகிலத்தின் குரு நாதர் முஹம்மத் எம் நபி நாதர் அவர் வாழ்வை வழிமொழிந்து மாந்தர் எம் வாழ்வும் வளம் பெற வழி நடாத்து யாவரையுமே!

இறை நியதிப்படியே பிறந்தோம் அவன் முறைப்படியே வாழ்வோம் இழி செயல் தவிர்ப்போம் உயர் செயல் வளர்ப்போம் நன்மைகள் பல நாம் செய்வோம் தீமைகள் நின்றும் வளர்வோம் முஹர்ரமே முழுமதி தாயாய்!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா (இலங்கை அதிபர் சேவை- தரம் 2) பஸ்யால

கருத்துகள்