முஹர்ரம் மாதம்

சின்னப் பிறை ஓன்று சிரிக்குதய்யா வானத்திலே ஈமானின் பேரருளாம் இஸ்லாத்தின் புது ஆண்டாய் நீதியின் ஒழுக்காற்றாய் நித்தியத்தை நிலைநாட்ட அவதரித்த முஹர்ரமே நீர் வாழ்க!

மடமை சிந்தையில் மூழ்கிக்கிடந்த மூர்கன் பிரஅவ்ன் தோல்வி கண்ட மாதம் முஹர்ரமே நீர் வாழ்க.

சாந்தி,சமாதானம் நிலை பெற வந்த புனித மாதம் முஹர்ரமே நீர் வாழ்க.

போர் செய்தல் தடை என இறை வாக்குப் பெற்ற சத்திய மாதம் முஹர்ரமே நீர் வாழ்க.

இறை கட்டளை மீறிய ஆதம், ஹவ்வா இருவருக்கும் இறை மன்னிப்பு கிட்டிய மாதம் முஹர்ரமே நீர் வாழ்க.

மீன் வயிற்றில் சிக்குன்ட நபி யூனூஸ் மீண்டும் உலகில் அவதரித்த புனித மாதம் முஹர்ரமே நீர் வாழ்க.

M.F. Hafsa (Galle) Faculty of Islamic Studies and Arabic Language. South Eastern University of Sri Lanka. வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்