வலியான காதலின் திருப்தியான வலிகள்!

என்னைத் தாண்டிப் போகும் பெண்னே உன்னைத் தழுவிப் போன என் நினைவுகள் எங்கே!

நீ மணக் கோலத்தில் இருப்பதைக் கண்டு மரணிக்கச் சென்றுவிட்டதா நம் நினைவுகள் இல்லை! உன் காலடியில் புதைந்து கொண்டு அழுகின்றதா என்னை கொன்று விடு என்று!

பல விதமான வலிகள் தந்துவிட்டுப் போன நீ என் விழிகளையும் திருடிச் சென்று போய் இருக்கலாம் நான் உன் திருமணம் கண்டு நான் மாய்ந்து போனதை தவிர்த்து இருக்கலாம் உன் திருமணம் அழகாய் நடந்திருக்க அன்று!

என்னை நீங்கள் பாவம் எனப் பார்க்காதீர்கள் நீங்கள் பார்க்கும் பார்வையில் பல்லாயிரம் வலிகளைத் தந்துவிடக் கூடலாம் நான்!

என் காதலை கல்லறை நோக்கி பயணிக்க வைத்தவளே உன் இல்லற வாழ்க்கையாவது நன்றாக அமைய என் கல்லறையில் முணு முணுக்கின்றேன் இன்று!

அனுதினமாய் நினைத்து வாழ்ந்த என்னை அநாதையாக்கிப் போனதற்கான காரணம் என்னவோ! என்று தெரியாது சிதறுண்டு கிடக்கின்றது என் உடல் இந்த கல்லறையில் உயிரே!

நான் வலிகளைக் கொண்டு வரைந்த ஓவியமே என் காதலின் நினைவாய்க் கிடக்கட்டும் உன் திருமணம்!

வலிகள் பெருக்கெடுத்து உள்ளதால் நான் இன்னும் மெருகு எடுத்துக் கூறவில்லை என குதுகலமாய் இருக்காதீர்கள் என் வலிகள் அவ்வளவு கொடூரமாய் உள்ளது என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள் எனத் தெரியவில்லை இன்னும்!

பொத்துவில் அஜ்மல்கான் வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்