வாழ்க முஹர்ரமே வாழ்க

சீர்கெட்டிருக்கும் உலகை சீர்படுத்த வருகின்றது முஹர்ரம் அங்கே தெரிகின்றது கீழ் வானிலே இரேகை கீற்றாய் பிறையென முஹர்ரம்

முஸ்லிகளின் முஸாபஹா வளரட்டும் புது வருடத்திலேனும் எமது மனங்களின் கறைகள் நீங்கட்டும் முஹர்ரத்தின் ஒளியது இவ்வுலகெங்கும் பேரொளியாய் பரவட்டும்

தாஷுஆ, ஆஷூரா நோற்றுவிட்டு வரவேட்பு மட்டும் வழங்கும் எம் உள்ளங்களை கொஞ்சம் சலவை செய்யட்டும்

தொழுகையின் சீர்மையது எம் சமூகம் மத்தியில் இம் முஹர்ரத்தில் இருந்தேனும் சீராகட்டும்

சாந்தி சமாதானம் பரவவென்றே தூய மாதங்களில் முதல் மாதமாய் -வந்த முஹர்ரம் புகழ் அகிலமெங்கும் சமாதானக் குரலாய் கேட்கட்டும்

பொருமைக்கும், பெருமைக்குமாய் இஸ்லாத்தை பரப்ப வந்த முஹர்ரமின் பாதை நீளட்டும்

மாற்றத்தின் உலகிலே மாசுபடிந்து கிடக்கும் உள்ளங்களை சீர்படுத்த முஹர்ரமின் ஆயுள் இன்னும் நீட்டும்

பொய்மை உலகில் உண்மை பேசத் தூண்டியே துணை புரியும் முஹர்ரமின் சேவை உயரட்டும்

சீர்படுத்த வந்த முஹர்ரமின் சீர்மையை பாதுகாக்கும் எண்ணத்தை ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் முஹர்ரமே இன்று தந்துவிடட்டும்

வருக முஹர்ரமே வருக வாழ்க முஹர்ரமே வாழ்க

H.F Badusha (Muruthalawa ) Faculty of Islamic Studies & Arabic Language. South Eastern University Of Sri lanka

கருத்துகள்