நவமணி பத்திரிகையின் தீவிர வாசகனாகிய நான் 20/= மற்றும் 40/= பெறுமதியான பத்திரிகையை வாங்குவதற்காக ஒவ்வொரு தடவையும் 128/= ஐ போக்குவரத்திற்காக செலவு செய்கிறேன். இவ்வாறு போக்குவரத்துச் செலவையும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் பத்திரிகை வாங்குவதற்குக் காரணம் இதில் பயனுள்ள பல விடயங்கள் வெளிவருவதனாலாகும்.
எனினும் கடந்த 30.08.2019 - 01.09.2019 அன்று வாங்கிய பத்திரிகையில், நான் வாரம் தவறாமல் ஆவலுடன் வாசிக்கும்; எழுத்தாளர் ஜுனைதா ஷரீப் எழுதும் "விடியாத இரவுகள்" எனும் தொடர் கதையை வாசிக்க முனைந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அப் பக்கம் வாசிக்க முடியாத வண்ணம் மங்களாகவும் எழுத்துத் தெளிவில்லாதவாறும் காணப்பட்டது.
எனவே இனிவரும் காலங்களில் வாசகர்களின் நலன் கருதி இவ்வாறான தவறுகள் இடம்பெறாவண்ணம் பத்திரிகையை வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக