முஹர்ரத்தை வரவேற்போம்

முஸ்லிமின் முதல் மாதம் இங்கிலீஸி ஜனவரியல்ல இந்து தையுமல்ல முன்னோக்கும் முஹர்ரமே முஸ்லிமின் முதல் மாதம்

மலர்கின்ற புத்தாண்டை மலர்ச்சியுடன் வரவேற்று கடந்தாண்டை கணிப்பீடு செய்து இவ்வாண்டுக்கு திட்டமிடு ஒருமுகத்துடன் - மறவாமல் போட்ட திட்டத்தை பொறுப்பாய் நிறைவேற்று

திட்டமில்லா செயல்கள் நட்டத்தை ஏற்படுத்தும் விட்ட தவறு மிட்டி நடவாமல் பட்ட வேதனை வட்டமாகாமல் இட்ட திட்டத்தை சட்டப்படி நடத்து

இஸ்லாமிய சரித்திரங்கள் பல படைத்த சத்திய மாதத்தில் சாதனைகள் பல புரிய சங்கற்பம் பூணுவோம்

Banu Caseem
 

கருத்துகள்