இது கர்வம் கொண்டு வாழும் மானிடர்கள் நிறைந்து போன உலகம் இது!
இந்த உலகினை உற்றுப் பார்த்தால் பார்ப்பவர்கள் பார்வையற்றுப் போய் விடுவீர்கள் விஷமாய் நிறைந்து கிடக்கின்றது கொடூர குணங்கள் இங்கு!
இங்கு நீங்கள் நல்லவனாய் வாழ முயற்சித்துப் பாருங்கள் உங்கள் முயற்சிகள் யாவும் இவ் மானிடர்களின் சூழ்ச்சியால் சிதைந்து போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு!
பலர் இங்கு பரிதாபம் பார்த்துப் பழகுவதில்லை. புழுக்காத வெளுத்துக் கிடக்கும் பணத்தைப் பார்த்துப் பழகுகின்றார்கள்!
நான் ஒன்றும் பணத்தாசை பிடித்துப் பேசவில்லை பணம் என்றதும் என் குணத்தினை அடகு வைத்து ஓடிவிடவுமில்லை. நான் எனக்காய் வாழ்கின்றேன் எவனுக்காயும் என்னை சிதைத்துக் கொள்ளாது இன்றுவரை!
இருண்டு போன பூமியில் எழுந்து கொண்டு வந்தேன் எனக்கான ஆயூதத்தை ஏந்தியபடி என் ஆயுலையாவது பிறர் மாற்றி விடக் கூடது என்று!
யோசித்துப் பாருங்கள் நீங்கள் வீணாக்கிப் போன வியர்வைகளையும் இரத்தங்களையும்! உங்கள் யோசனை உயரப் பறந்து திரியட்டும் கீழ் பறந்து ஊரழிந்து போய் விடாது இருக்க!
எழுந்து யோசியுங்கள் அழகாய் சுவாசிக்க சுதந்திரமான காற்றினை!
கருத்துகள்
கருத்துரையிடுக