உறவுகளின் உதயம்

பத்துத் திங்கள் சுமந்து பத்தினி அவள் பாடுபட்டு பாரினில் என்னை மிளிர செய்தவள் பாசத்தின் உருவான அன்னை...

தொட்டதெல்லாம் நான் கேட்க தொடர்ந்தும் வாங்கித் தந்து தொலினிலே தினம் சுமக்கும் தொட்டிலில் தொடங்கிய உறவே என்-தந்தை..

அடிக்கடி அடிபட்டு - எனக்காய் அப்பாவிடம் திட்டு பட்டு அன்பால் அரவணைப்பவன் அன்புள்ள என் அண்ணன்...

அழகின் இளவரசி என்று அனுதினம் எனை கொஞ்சி அன்னையை மிஞ்ச நினைப்பவள் அகிலத்தின் தாரகை என்- அக்கா...

குரும்புகளின் பிறப்பிடம் கழகத்தின் முதலிடம் குதுகளத்தில் தினம் நாம் - காரணம் குட்டித் தங்கையும் சுட்டித் தம்பியும்...

கதைகளுக்கு கதாபாத்திரம் குடுத்து கதாநாயகியாய் என்னையும் மாற்றிடும் கருணையின் உறுவான கலைஞர்கள் தாத்தா, பாட்டி..

குட்டிக் குடும்பம் ஒற்றை கூட்டில் சந்தோசம் மிகுதி சஞ்சலங்கள் விரோதியாக...

உறவுகளை நினைப்போம்- தினம் அவர் உணர்வுகளை மதிப்போம்.. உல்லாசப் பறவை போல உலகினையெ ஆள்வோம்..

Asana Akbar Seu of srilanka Anuradhapura

கருத்துகள்