எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 1

இளம் குளிர் தழுவ சுபஹ் தொழுது முற்றத்தில் கண் அயர்ந்த நிசாத் தினிக்கிட்டு எழுந்தான். நேரத்தை பார்த்தான் ஆறு மணி திடீர் என எழும்பி குளிக்க சென்றான். நிசாத் மிகவும் நல்லவன் நேர்மை தவறாதவன் இன்ஜினியர் ஆக சுயமாக போரிங் தொடர்போடு கம்பெனி நடத்தி கை நிறைய சம்பாதித்து குடும்பத்தை பார்க்கும் கடை குட்டி. எல்லாருக்கும் செல்ல பிள்ளை ஊரிலும் அவனுக்கு மதிப்பு. ஒரு நாநாவுக்கும் ஒரு ராத்தாவுக்கும் மத்தியில் திறமையாக படித்தவன்.

இரண்டு பேருக்கும் உம்மா ஒரு வகையில் திருமணம் செய்து வைத்து விட்டார். ஆனால் இளைய மகன் நிசாத் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற கனவு தாய் சாராவை அங்களாய்த்தது.

குளிர்ந்து விட்டு வந்த நிசாத் மேசையை பார்த்தான் டீ உடன் காலை உணவும் இருந்தது. ஆனால் உம்மாவை காணவில்லை. ஆமா பழைய வேலைய ஆரம்பிச்சிடாங்களா என மனதுக்குள் எண்ணியே படியே சாப்பிட்டு முடித்து விட்டு ஆபீஸுக்கு புறப்பட்டு காரில் சென்றான்.

வேலை முடிந்து வரும் போது நிசாத் சேரியில் மிகவும் ஒழுக்கமாக முகம் விளங்கியும் விளங்காமலும்  தண்ணீர் எடுத்து வரும் பெண்ணை பார்த்தான். ஏதோ அவன் மனதில் ஒரு ஊசலாட்டம். அதை கவனிக்காத மாதிரி அவள் வீட்டை மற்றும் மனதில் குறித்தவனாக வீட்டுக்கு சென்றான்.

உம்மா அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உம்மாவின் பதில் சலாம் கிட்சனில் இருந்து கேட்டது.

"முகம் கழுவி விட்டு கெதியா சாப்பிட வா நிசாத் எனகி வேல இருக்கு.."

"என்னமா வீடு வீடா போற வேலையா என நக்கலாய் சொல்லி ரூமுக்குள் போனான்."

வாஷ் பண்ணிவிட்டு நிசாத் சாப்பிட வந்தான். சாராவும் நிசாத்தும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது பூனை நகர்வதை போல கதையை நகர்த்தினான்.

"என்னமா மூணு கிழமையா பொண்ணு பொண்ணு னு ஓடித்தான் திரிரிங்க காலைல கூட ஆள காண கிடைக்கல."

"ஓடா மகன் உனக்கும் நமட குடும்பத்துக்கும் ஏத்த மாதிரி தானே பொண்ணு பாக்கணும் காலையில கூட போனன் செட் ஆகல பொண்ணு ஓகே ஆனா குடும்பம் சரி இல்ல."

"உம்மா எல்லாரும் பொண்ண தான் முடிக்குற குடும்பத இல்ல என்று சிரித்தபடி பதில் சொன்னான்."

"சாராவுக்கு நக்கலாய் இருந்தது டேய் நாளைக்கு குடும்பம் சரில்ல அது இதுன்னு வர கூடா அதான் அப்படி சொன்னன்."

"ஆ சரிம்மா உங்க சோங் போதும் நான் போய் ரெஸ்ட் எடுக்கன் என்று சாப்பிட்டு கை கழுவி விட்டு வராந்தாவில் கிடந்த சோபாவில் அமர்ந்து ரிலக்ஸ் ஆக கண் மூடினான்."

திடீர் என அந்த சேரி பெண் தோற்றம் அவனை அழைத்தது. சே.... என்ன இது புதுசா பொண்ணுங்க  ஜோசனை. டேய் நிசாத் என்னடா நடந்திச்சு என அவனை அவனே நக்கலாய் கேள்வி கேட்டு  சே அது ஒன்னும் இல்ல. என்று கூறி கொண்டு கண் அயர்ந்தான்.

அவ்வளவு தான் அவனின் தூக்கம் கெட்டது. சாரா புள்ள சாரா  என்று பக்கத்து வீட்டு சித்தி ராத்தாவின்  குரல் கேட்க திடீர் என கண் விழித்தான் நிசாத்

"ஓ... வாங்க ராத்தா வாங்க  இருங்க"

என்று சாராவும் சித்தி ராத்தா இருவரும் கதைத்து கொண்டு இருக்கையில் நிசாத் எழும்பி வந்து தனது உம்மாவின் அருகில் அமர்ந்தான்.

"என்ன அண்டி திடீர்னு இந்த பக்கம் வீட்லயும் கடும் கலகலப்பு."

"ஓ நிசாத் மகனும் மருமகளும் மலேசியா இருந்து ராவு வரகுள்ள சுபஹு அஞ்சி மணி மகன் அப்ப அவக தான் பகல் சமையல் ஏதோ ரைசாம் என்று செஞ்சிட்டு இருந்தாக அதோட பாரு என்ட பேர பிள்ளக ரெண்டும் என்ன வடிவாதான் இங்கிலீசு பேசுது. எனட வந்து ஏதோ வாடு ஆயூ எங்கிதுகள் எனக்கி என்ன தெரியும் முழிச்சு கிட்டு இருந்தன்டா மகன்."

சித்தி ராத்தாவின்  பேச்சை கேட்ட நிசாத் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டு அண்டி அது "வட் ஆயூ டூயிங் அண்டி" என மீண்டும் விழாத குறையாக சிரித்தான்.

"டேய் சும்மா  இரிடா அவன் இருக்கட்டும ராதா நீங்க சொல்லுங்க

"இவன முதல் வசமான ஒருத்தி கிட்ட புடிச்சி கொடு சாரா அப்பான் இவன் நக்கல் கொறையும்"

"ஆஹா பார்டா அண்டி தமாஸ் பண்றா... நீங்க புடிச்சி கொடுக்க நா என்ன பூன குட்டியா...."

"ஹா ஹா ஹா... நோ நெவர் அண்டி....." என்று கிண்டல் பண்ணி கொண்டு எழ அஸர் அதான் சொன்னது.

"மோம்... நான் வோஸ் பண்ணிட்டு தொழ போய் வாரன்."

"அண்டி நீங்க எப்டி பிடிச்சி கொடுக்குறனு ஐடியா போடுங்க .... Bye" என்று சொல்லிய படி நிசாத் வோஸ் பண்ணி விட்டு பள்ளிக்கு சென்றான்.

"நான் தொழுத்துட்டும் வந்துதுடன் இந்த உம்மாகும் அண்டிகும்  இந்த பேச்சு இனம் முடியல அப்டி என்ன தான் பேசுறீங்களோ என்று வரும்போதே சொல்லி கொண்டு வந்தான்."

"இல்ல மகன் இப்ப அசர் தொழுதுடு ஒரு பிள்ளை இருக்கு பார்த்துட்டு வரபோரம்."

"இந்த காலத்துல உமாக்கு ஏற்ற மருமகள் அமையே மாடா டாய் நிசாத்து பேசாம சந்நியாசினி ஆகி போய்டுடா என உம்மாவை கிட்டினான்.

உம்மா ஒன்னு சொல்லடா எங்கிட ஒரு வாடி எப்டி பொண்ணு உனக்கு பாக்க என்று கேடிங்களா ? நீங்க பாருங்க மா பட் மை பியூஜெர் வைப் எப்டி இருக்கணும் என்டு நான் சொல்றன்.

அழகு தேவேல்ல. ஒழுக்கமா மார்க்கமா என்ன உங்களை போல ஒரு தாயா சந்தேகம் இல்லாம ரெண்டு குடும்பத்தையும் பார்த்துட்டு என்டே உயிர்ல பாதி இல்ல முழுசா இருக்கணும். இனி வெர்க் பண்ற அவெ இஷ்டம் படிக்காடியும் என்டே லைப்புக்கு ஒரு பெரிய துணையா வந்தா போதுமா அவள நான் தாங்குற ஒரு நல்ல கணவனா இருப்பன் ஒரு சின்ன சண்டை கூட எங்களுக்கு வர கூடா அவள் மேலே ஒரு சின்ன கோபம் கூட நான் படக்கூடா என்ட லைஃ ல ஏனா அதால கூட அவள் மனம் நோகிட கூடாமா சொல்ல போனா இன்னம் இருக்கு மா சுருக்கமா பேபிய மாறி பாத்துகுவன் அப்டி ஒரு பேபிமா கிடச்சா போதும்மா

என தாயை ஒரு புன்முறுகளுடன் பார்த்தான். உம்மாவும் சித்தி ராத்தாவும் வாயாடச்சி போய்ட்டாங்க.

புள்ள சாரா இந்த காலத்துல இப்படி ஒரு மகன் நீ பெத்ததுக்கு உனக்கு என்ன சொல்றனு புரில புள்ள. இன்ஷா அல்லாஹ் இவனுக்கு கிடைக்க போன்ற பொண்ணு ரொம்ப பெரிய பாக்கியசாலி மகாராணி மாறி வாழுவாள்.

தாய் சாரா தன் மகனின் எதிர்பார்ப்பை கேட்காமல் தனது இஷ்ட படி முடிவு பண்ணிடம்  என்ற கவலையில் உடைந்து போக மெல்ல மகன் மனம் உடையாமல் இருக்க அடா ராஜா உனக்குள்ள இப்படி ஒரு ராணி கனவா அபிடின்னு ஒரு சீன் போட.

அடேய் நீ கொம்புல புள்ள இல்ல கொஞ்சம் நிப்பாடு உண்ட வெக்கத்தை என்று சித்தி அண்டி சொல்ல மூவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.

அந்த சிரிப்பு நெடு நேரம் நிலைக்காது என்று அறியாமலே திடீர் என நிசாத்தின் போன் மணி அடித்தது. சிரிபோடு போனை தூக்கினான். காதில் வைத்தது தான் தாமதம் கார் மின்னல் வேகத்தில் பறந்தது.

தொடரும்.... K.Fathima Risama Nintavur. SEUSL. வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்