சாரா மிகவும் பயத்துடன்...
"சித்தி ராத்தா என்ன ஆச்சு அவனுக்கு எவ்வளவு வேகமாக போரான். எனக்கு பயமா இருக்கு யாரு கோள் பண்ணினனு புரில..."
"சாரா கவல படாதே ஏதோ ஆஃபீஸ் வேலையா இருக்கும் பொறுமையா இரு..." என்ற ஆறுதலுக்கு சாரா பொறுமை காத்தாள்.
நிசாத் பத்தே நிமிடத்தில் ஆஃபீஸை அடைந்தான். நிசாத் ரொம்ப பதட்டமாக ஆஃபீஸ்னுள் நுழைந்தான். மிகவும் பதட்டமாகவும் ஆஃபீஸ் இருந்தது. எல்லாரும் எதையோ தேடுவதை போல எல்லா பய்ல்களையும் செக் பண்ணி கொண்டு இருக்கையில் நிசாத்தும் சேர்ந்து டோக்குமெண்ட்ஸ் எல்லாம் மீண்டும் அனலைசிஸ் பண்ணி கொண்டு இருந்தான் தன்னால் இயலாமல் தலையில் கை வைத்து கதிரையில் உட்கார்ந்து கண்கலங்கினான். அதை வெளிக்கட்டாது. நூற்றுக்கும் மேற்பட்ட கணக்காய்வாளர்கள் அழைக்கப்பட்டு அனைத்து பய்ல்களும் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டன.
எந்த கணக்கும் சரியாக வந்து சேரவில்லை. சிறிய காண்ட்ராக்ட் என்றாலும் பரவாயில்லை நூறு கோடி பெறுமதியான அதிஷ்டமாக வந்து சேர்ந்த காண்ட்ராக்ட் அது. அதன் இழப்பை ஏற்க அவன் மனது இடம் கொடுக்கவில்லை. இருந்தும் தேடலை மேற்கொள்ள நீல கலர் பய்ல் ஒன்று கண்ணில் எழுமாறாக பட்டதை கண்டான். அது முடிக்க பட்ட காண்ட்ராக்ட் பய்ல்களுக்குள் அடியில் இருந்தது. அதை நம்பிக்கையோடு எடுத்து பார்த்தான் அளவில்லாத சந்தோஷத்தோடு ஓ கோட் தங்கியு என்று சத்தமாகக் கத்தி சொன்னான். ஆஃபீஸ் நிசப்தம் பூண்டது. ஸ்டாப் எல்லாரும் மிகவும் சந்தோசம் அடைந்தனர். ஏன் என்றால் அதில் எல்லாருய லைஃ அடங்கி இருந்தது.
இப்போது தான் அவன் ஒரு நிலைக்கு வந்தான் ஆஃபீஸ் வேலைகளை ஒழுங்கு படுத்த சொல்லி விட்டு நேரத்தை பார்த்தான் நள்ளிரவு ஒரு மணியை முள் தொட்டு கொண்டு இருந்தது. அப்போது தாய்க்கு அழைப்பு தொடர தன் போனை பார்த்தான். அல்லாஹ் உம்மா கோள் பண்ணிகாங்க. என்று சாராவுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
ரிங்..... ரிங்...உம்மா ... என்று வாடிய குரலில் அழைத்தான்.
மகன் என்ன நடந்த ஏன் அப்படி போன இப்போ எங்க ஏன் ஒரு மாதிரியா பேசுராய் என்று மூசு விடாமல் கேள்விகளை அடிக்கி கொண்டு போக..
"உம்மா ஒன்றும் இல்லை. சாப்டிங்களா நான் இன்னா வரதான்." என்று சாராவின் கேள்விகளுக்கு மொத்தமாக பதில் சொல்லி போனை கட் பண்ணினான்.
ஆஃபீஸ் வேலைகளை முடித்து விட்டு சேகுரிடியை அலர்ட் பண்ணி விட்டு வீட்டுக்கு வர கார் சத்தம் கேட்டு சாராவும் சித்தி அண்டியும் வெளியே வர காரை பார்க் பண்ணி விட்டு "உம்மா" என்று நிசாத் வர தாய் உள்ளே அழைத்து சென்றாள். வந்ததும் வராததுமா "என்ன அண்டி எங்க வீட்டுக்கு இந்த மிட் நயிட்ல வந்திகிங்க. அங்கிள் கூட சண்டையா" என்று கேட்டு சிரிக்க வாடிய தாயின் முகம் மலர்ந்தது.
"டேய் போய் வாஷ் பண்ணி வாடா..." என்று கவலை மறந்து சாராவும் சித்தி அண்டியும் சொல்ல ஆஹ் சரி சரி வரன் வரன் என்று சொல்லி சென்றான். சாராவும் சித்தி அண்டியும் நிசாத்தின் வருகைக்கு காத்திருக்க குளித்து முடித்து வரும் போது சாராவுக்கும் சித்தி அண்டிக்கும் தூக்கம் போய் விட்டது.
நேரத்தை பார்த்தான் ஐந்து மணி சுபஹ் அதான் சொல்ல பள்ளியை நோக்கி புறப்பட்டான். கதவை திறந்த சத்தம் கேட்க தூங்கிய இருவரும் எழுந்து தொழுது விட்டு டீ குடித்து கொண்டு இருக்கும் போது தொழுகை முடிந்து நிசாத்தும் வர சாரா அவனுக்கும் டீ போட சென்றார். "புள்ள சாரா நான் நேற்று வந்த நான் இப்ப டைம் ஆறு மணி ஆகுது நான் வீட போறன்" என்று நிசாதிடமும் சொல்லி விட்டு சென்றார் சித்தி அண்டி. உம்மா டீ ஊற்றி வர அதை குடித்துக் கொண்டு நடந்த எல்லாம் சொன்னான். மகன் அல்லாஹ் தான் உனக்கு கை தந்த அப்டின்னு பேசி விட்டு சரி மகன் கொஞ்சம் தூங்கு என்று சொல்லி கிட்ஜன் நுழைந்தார் சாரா. மனசு ஏதோ அமைதி பூண்டது அவனும் தூங்கி விட்டான்.
நேரம் நகர திடீர் என கண் முழித்தான் நேரம் பத்தை தாண்டி கொண்டு இருந்தது.
"உம்மா உம்மா..... டைம் பத்து மணியே தாண்டுது ஏ என்ன ஏழுப்பல"
"இல்ல மகன் நீ இரவு லேட் ஆஹ் தான் வந்த அப்போ தூண்கடும்டு விட்டிடன் பா..."
"அது சரி அதுக்கு இவ்ளோ நேரமாவாமா விடுவிங்க..."
"டுடே ஒரு மீடிங் இருக்குமா... சோ நான் போகணும்... பிரஸ் ஆகிடு வரன்... சாப்பாடு எடுத்து வைங்க மா..."
"ஆஹ் சரி நிசாத் குளிச்சிடு வா..."
"மம்..."
என்று சொல்லி கொண்டு நிசாத் வாஷ் ரூம் சென்றான். அரை மணி நேரம் கழித்து நிசாத் வந்து சாப்பிட அமர்ந்தான். சாரா அன்போடு சாப்பாட்டை பறி மாற
"உம்மா....."
"என்ன மகன்....."
"நீங்களும் சாப்பிடுங்க பிறகு நீங்க சாப்பிட மாடிங்க..."
"இல்ல நிசாத் நீ சாப்பிடு நான் லேட் ஆகி சாப்பிடுறன்."
"இல்ல வாங்க" என்று தாயின் கையை இழுத்து உட்கார வைத்தான்.
"விட மாட்டடா" என்று சொல்லியே படி சாப்பிட ஆரம்பித்த சாரா.
"நிசாத் ராத்தா நானா எல்லாரும் கல்யாணம் முடிச்சிகி நல்ல இருக்காங்க ஆன உனக்கு நல்ல ஒரு பொண்ணு பாகன் சரியா வருது இல்ல." என்று கவலையாக கூற.
"உம்மா அல்லாஹ் அமைச்சது அமைச்ச நேரம் சரியா வரும். இதை நினைச்சி வை மோம் பீல் பண்றிங்க டோன்ட் பீல் மை டியர் மோம்..."
"எனக்குரிய ஏன்ஜெல் எங்கம்மா இருக்க என் உம்மாட கண்ணுல பட்டுடுமா... உனக்கு அம்பது பிவ்ன்ல நகை போடுறேன்." என்று நிசாத் சொல்ல சாராவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
சிரிப்பில் பொரை அடிக்க ... "கு கு க்கு..." என சாரா இரும நிசாத் தண்ணி எடுக்கும் போது...
"புள்ள தண்ணிய குடி சாரா..." என்று சித்தி அண்டி பொரை அடித்தது சாராவுக்கு எங்க போனது என்று விளங்க வில்லை.
"ராத்தா வாங்க வாங்க... மேசைக்கி வாங்க அப்டியே சாப்டுவம்."
"இல்ல புள்ள நான் இன்னா இப்பதான் சாப்பிடு வந்த இண்டைக்கு மகனும் மருமகளும் சம்மந்திட போன அப்போ அங்க சாப்பாடாம்டு போட்டு எனக்கும் அவருக்கும் கட்டி அனுப்பியிருந்தாக அப்போ சாப்பிடு போடு அப்டியே இங்கால வந்த புள்ள..."
"ஆஹ் சரி ராத்தா... இன்னா முடிஞ்சி வாரன்."
"நீ ஆறுதலை சாப்பிட்டு வா சாரா... நான் இருக்கன்."
உம்மாவும் மகனும் சாப்பிட்டு முடிந்ததும் சோபாவுக்கு சென்றார்கள்.
"என்ன நிசாத் ஆஃபீஸ் கு போகலயா.."
"ஓ அண்டி எப்போ பார்த்தாலும் எப்படா இவன அனுப்புற என்று இருங்க."
"அடேய் மகனே வேலைக்கு போரத்த கேட்கவும் என்னடா நீ கதைக்கிற கதை...."
"ஹா ஹா ஹா.... சும்மா தமாஸ் அண்டி. இனி போகத்தான்... எமெர்ஜென்சி மீடிங் ஒன்னு இருக்கு போகத்தான்... சரி நீங்க என்னரம் கிளம்புறீங்க..."
"பாரு சாரா உன் மகன்ட குறும்ப..."
"அல்லாஹ் அண்டி அதை இல்ல... பொண்ணு பாக்க போகத்தான் வந்திக்கிங்க அதை கேட்டன்."
"ஆஹ் அதையா... அசர் போல போகத்தான்... பாரவாலயே உன் புள்ள விவரமாதான் இருக்கான். சாரா..."
"பின்ன நான் கல்யாணம் முடிக்கிறல்லயா? ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்து விட்டு ஆஹ் சரி உம்மா சரி அண்டி நான் ஆஃபீஸ் போய் வாரன்."
"ஆஹ் சரி மகன் பீ அமானில்லாஹ்."
"சரி" என சொல்லிய நிசாத் சர்ர்ர்ர்..... என கார் எடுத்து ஆஃபீஸ்க்கு புறப்பட்டான்.
ஆபிஸ் போர வழியில் ஒரு அடர்ந்த இயற்கை வழி சுற்று பாதையால் கடக்க வேண்டி இருக்கும். திடீர் என நிசாத்தின் கார் முடிவுக்கும் ஆரம்பத்திற்கும் நடுவில் நின்று விட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக