எழுத்தாளர்களின் சிந்தனைக்கு

முஸ்லிம் சமூகத்தில் சான்றிதழ் பெற்ற பட்டதாரிகள் பெருகிவருகின்றார்கள்; ஆனால் சமூகத்தின் சிந்தனைத் தரம் மிகக் கீழான நிலையில் உள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மொழித்தரம் மிகக் குறைவாக உள்ளது. அவர்களது அறிவும், பார்வையும், நோக்கும் மிக மேலோட்டமாக உள்ளது.

முஸ்லிம்களால் எழுதப்படும் கட்டுரைகளில் பகுப்பாய்வு, விமர்சன நோக்கு என்பன குறைவாகவே உள்ளது. இவை அனைத்துக்கும் மூல காரணம் வாசிப்பின்மையாகும். வாசிப்பு ஒரு மனிதனைப் பூரண மனிதனாக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

சமூக மேம்பாட்டிற்கு விரிந்த, ஆழமான, பன்முகப்பட்ட அறிவு அவசியமாகும். எனவே முஸ்லிம் சிறுவர்கள் ஆரம்ப காலம் முதலே வாசிப்பதற்குத் தூண்டப்படல் வேண்டும். நூல்களை நேசிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும். வீடுகள் தோறும் சில முக்கிய நூல்கள் உள்ளடங்கிய சிறு நூல் நிலையங்கள் இருத்தல் வேண்டும்.

பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதில் முஸ்லிம் ஆசிரியர்களினதும், பாடசாலைகளினதும் பங்கு மிகப் பொறுப்பு மிக்கது.

கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி

கருத்துகள்