எழுந்து வாடா தம்பி

எழுந்து வாடா தம்பி எழுந்து வா கருவுலகில் காரிருளை வென்றவன் நீயடா

ஆழ்துளையில் மரணத்தை வென்று வாடா தம்பி கரு சுமந்த தாயோடு பூலோகமே நம்பியிருக்கு

உன் மீள்வருகையை எண்ணி கலைத்து விடாதே தம்பி கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கடித்திடாதே தம்பி

அரவணைக்க யாருமில்லையே அருகில் என்று அழுதிடாதே தம்பி எழுந்து வாடா தம்பி ஒரு தேசமே அரவணைக்க காத்திருக்குதுடா தம்பி

அனுகவி றிப்கான். அட்டாளைச்சேனை-06

கருத்துகள்