சொல்வதற்கு ஒரு நூறு வார்த்தைகள் தொண்டைக்குள் குமிழியிருக்க சப்பிவிழுங்கிக் கொண்டிருக்கிறது சதைகளை
எதுவாக இருக்கும் என யூகிக்க சில கணங்கள் தருகின்றேன் மண்டியிடவும் சில கணங்கள் தருகின்றேன் தாமதமின்றி ஏதேனுமொன்றைத் தெரிவு செய்யுங்கள்
தாய்ப்பட்சியின் அலகிலிருந்து துரதிஷ்டமாக அதன் புள்ளைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு மண்ணுக்குள் தலைபுதைத்திருந்த புழுவை வீசியெறிந்தும் விட்டனர்
கழுகுக்கு இன்று இரண்டு இரைகள் நம்பியிருக்க வேண்டிய வார்த்தைகளை நீயொருபோதும் மறுத்து இருக்கக் கூடாது மறுத்து இருக்க வேண்டிய அசத்தியத்தை பரீட்சித்தும் இருக்கக்கூடாது
பொய்மை எனக் கருதா மாசற்ற அன்பின் மடமையை கண்களை மூடிக்கொண்டே கல்லெறிந்து கொன்றுவிடட்டும் அப்போதேனும் இனியொரு வசைச் சொல் பிறவாதிருக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக