"இங்க பாரு மா... நம்ம ஜெனியும், கேகேவும் மிஸ்ஸிங் என்னு நியூஸ் வருது. என்ன இதெல்லாம் காலைல நீயும், விக்டரும் தானே அவங்கள சென்ட் ஆஃப் பண்ண போனீங்க. அதுக்குள்ள எப்படி? யாரு கம்ப்ளைன் பன்னது? என்னது இதெல்லாம்." என்று லூதர் குளம்பி போய் கேட்க, டிடானியா மனதில்
"அடக்கடவுளே! இது இவ்வளவு சீக்கிரமா வைரல் ஆகும்னு நினைக்கவே இல்லியே, ஏதோ அவங்க லெவெல்ல தேடுவாங்க என்னு பார்த்தா, ஸ்டேட் லெவலுக்கு கொண்டுபோய்ட்டாங்க. இதை இப்போ மித்ரத் வேற பார்ப்பானே, கண்டிப்பா அவனுக்கு சந்தேகம் வந்துடும் சிட் இப்போ என்ன பண்றது?"
என்று யோசித்தாள். அவள் யோசித்து கொண்டிருந்ததால் அப்பா ரெண்டு மூணு முறை கூப்பிட்டும் அசையவில்லை. இறுதியாக அவர் தோளை பிடித்து உலுக்கியதும் தான் சரியானாள்.
"ஆஹ்.."
"என்னம்மா நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ வேற ஏதோ சிந்தனையில் இருக்குறே?"
"இல்லப்பா, எனக்கே அதிர்ச்சியாக தான் இருக்கு.. காலைல நாங்க அவங்கள எயார்போர்ட்ல விட்டுட்டு தான் வந்தோம்."
என்று வருத்தப்படுவது போல் நடித்தாள்.
"நான் போய் என்னோட கமிஷனர் பிரண்ட் கிட்ட இதுவிஷயமா என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வர்றேன். நீ மீரா, இல்லேன்னா ராபர்ட்க்கு போன் பண்ணி என்னாச்சுன்னு கேளு."
என்று விட்டு அவர் புறப்பட அவர் போனதும் தன்னுடைய பேக்கை தூக்கி சோபாவில் போட்டு விட்டு...
"அப்பாடா..." என்று அமர்ந்தவள், வேலையாளை கூப்பிட்டு ஜூஸ் எடுத்து வர சொன்னாள்.
"நாம ஒண்ணு நினைச்சா அது வேற மாதிரி நடக்குது. இருந்தாலும் இப்போதைக்கு அவங்க ரெண்டுபேரையும் போலீஸ் என்ன அந்த மித்ரத் கூட கண்டுபிடிக்க முடியாது." என்று எண்ணியவள் விக்டருக்கு ஃபோனை போட்டு விபரத்தை சொன்னாள்.
"ஆஹ்ஹ்... ஒஹ்ஹ். அந்த அளவு ஃபேமஸ் ஆயிட்டங்களா... இருக்கட்டும் நான் இப்போ அவங்களுக்காக ஐடி ரெடி பண்ண கொடுத்த இடத்துக்கு போறேன். அப்பறம் தான் வீட்டுக்கு போவேன். அப்பா ஏதும் கேட்டா நீயும் தெரியாத மாதிரி நடி... நான் ஃபோனை வெச்சிர்றேன்." என்று சொல்லி கட் பண்ணினான்.
**************
விக்டரின் வீடு, அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டே நடந்த விடயங்களை எல்லாம் மீள் பரிசீலனை செய்து கொண்டிருந்தான் கேகே. ஜெனி அங்கு கிடந்த புத்தகங்கள், சஞ்சிகைகளை சும்மா புரட்டி கொண்டும், அடிக்கடி கேகே தன்னை பார்க்க வேண்டும் என்று எதையாவது விழவைத்து கொண்டும் இருந்தாள்.
"கொஞ்சமாச்சும் பார்க்கிறானா பாரேன். அவன் ஒடம்பு மாதிரி அவன் இதயமும் கனத்து போய்டுச்சா... பேசாம போய் நாம அவனை லவ் பண்ணுறத்தை சொல்லிடுவோமா... சே சே இப்போ வேணாம்... விக்டர் பிரிட்ஜ்ல என்ன வெச்சிருக்கான்னு பாப்போம்." என்று தாறுமாறாக எதை எதை எல்லாம் எண்ணி கொண்டிருந்த ஜெனி .
பிரிட்ஜில் என்ன இருக்கிறது சாப்பிட என்று பார்க்க போக அவளுக்கு முன்னாடி கேகே போய் பிரிட்ஜை திறந்தான். இவள் அப்படியே நின்று விட்டாள். அவன் இவளிடம்...
"ஏதாச்சும் வேணுமா?" என்று கேட்டான்.
"இ... இல்ல... நான் சும்மா சும்மா வந்தேன்." என்று சொல்ல உள்ளே இருந்து ஒரு கண்ணாடி போத்தலை வெளியே எடுத்தான் கேகே. அது பார்க்க தண்ணீர் போலவே இருந்தது. அதை பார்த்து விட்டு கவனிக்காது திரும்பியவளின் கவனத்தை அந்த பாட்டிலில் ஒட்டி இருந்த 'வோட்கா 'என்ற வார்த்தை இழுத்தது.
"ஓஹ். மை.. காட்..." என்று கத்தி கொண்டே அவனை குடிக்க விடக்கூடாது. என்று அவசரமாக ஓடிப்போய் தட்டிவிட பாட்டில் ஒரு மூலையில் போய் உடைந்து நொறுங்க போன வேகத்தில் கேகே மீது மோதி அவனோடு சேர்ந்தே கீழே விழுந்தாள் ஜெனி. அத்தோடு இரண்டு மூன்று முறை தரையில் உருண்டபோது கீழே இருந்த கார்பெட்டில் போய் கிடந்தனர் இருவரும். அவனும் எதிர்பாராத விபத்து இது. ஓரிரு நிமிடம் மௌனம் நீடித்தது. கண்கள் மட்டும் பேசிக்கொண்டன. கூச்சம் பிடுங்கி தின்றது. அவள் எழுந்திருக்க முயற்சித்தாள். ஆனால் ஏதோ ஒன்று அவன் பட்டனில் மாட்டி கொண்டது. இருவரும் அதை எடுக்க முயற்சித்து கொண்டிருந்த போது கதவு திறந்தது.
"ஹாய் காய்ஸ்..."
"ஆஹ்."
கருத்துகள்
கருத்துரையிடுக