சல்லடையாகும் ஷஹாதா

அகக்கண்ணில் ஓர் ஷஹாதா அதை தெரியாத நம் சமூகம் அகப்பட்டுக் கொண்டது அரசியலில் அநீதம் அங்கே தான் ஆரம்பம்...

வாக்களிக்கும் உரிமை பெற்று வையகத்தை புதிதாய் மாற்று வாழ வேண்டும் சம உரிமை வீழ வேண்டும் மத அடிமை...

உனக்கான பிரதிநிதியை உலகுக்கு அறிமுகம் செய்கிறாய் உண்மை உயிர் பெறட்டும் உன் வாக்கதை உறுதியளிக்கும்...

சிபாரிசெனும் ஷபாஅத்தை தான் சாட்சியிட்டு முன்மொழிகிறாய் சமுதாயம் முன்னேற்றிடுமா? சகவாழ்வு முறையாகிடுமா?

நலவில் பங்குண்டு நபிமொழி - அ நீதத்தை அறவே ஒழி. நேர்மையற்ற சிலர் வழி நாட்டில் வீழ்ச்சி;- போதும் நீ விழி....

தனிமனித உரிமை தான் - நாட்டின் தலையெழுத்தை மாற்றிடுது தயக்கம் கொள்வது முறையல்ல தீமைகளை களைவதற்கு....

தகுந்த தலைமை தானும் தம் நாட்டின் நிலை பேணும் தீவிர நிலைமை தான் துயரத்தின் துவக்க நிலை...

கலகத்தை தோற்றும் கனவான் வேண்டாம் குடிமகனை வாட்டும் தயவான் வேண்டாம் குணாதிசயம் கொண்ட எளியான் போதும்- நல் கூட்டமைப்பு வேண்டும் எப்போதும்....

சர்வதிகாரம் சர்வசாதாரணம்- நீ மாறிடு சான்றோருக்கு ஓர் உதாரணம். சாயமும் சாதியும் போலிச்சாயல் சட்டத்தின் முன் சகலரும் சமம்...

நாடு செழிக்க நாட்டுப்பற்று வேண்டும் நம் வீடு லயிக்க நல்ல சிந்தனைகள் வேண்டும் ...

நாடானாலும் வீடானாலும் நல்ல அரசியல் தலைகள் வேண்டும் உரிமையை உதாசீனம் செய்யாது உனதான தலைமையை தீர்மானி நன்றே....

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka...

கருத்துகள்